விஜய் படத்துக்காக தன் படத்தை விட்டுக்கொடுத்த பிரபல முன்னணி நடிகர் !

0
2439

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கோலோச்சினார்கள். அதன்பின் ரஜினி-கமல் யுகம் ஆரம்பித்தது. முன்பு தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் ரஜினி, கமல், டி.ராஜேந்தர், பாக்யராஜ், ‘மைக்’ மோகன், ராமராஜன் படங்கள் எல்லாம் ஒரேநாளில் ரிலீஸாகி கொண்டாட்டமாக இருக்கும்.

இப்போது சினிமாவில் போட்டிபோடும் ஒரே ஹீரோக்களின் படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆவதே இல்லை. ரஜினி படம் ஒருநாளில் என்றால் கமல்படம் இன்னொரு நாளில் வெளியாகி வருகிறது. அதபோல் தற்போதைய போட்டியாளர்களான விஜய் -அஜித் படங்களும் ஒரேநாளில் வெளியாவதில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் விஜய்யின் ‘ஜில்லா’வும் அஜித்தின் ‘வீரம்’ திரைப்படமும் ஒரேநாளில் ரிலீஸானது. அப்போதுகூட ‘ஜில்லா’பட பிரஸ்மீட்டில் ‘வீரம்’பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் விஜய் .

தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துவரும் ‘மெர்சல்’ திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது தயாரிப்பு தரப்பு. அதேநாளில் விக்ரம், தமன்னா நடித்துவரும் ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தையும் ரிலீஸ்செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
ஒரேநாளில் இரண்டு ஹீரோக்களின் திரைப்படங்களை வெளியிடுவதால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் தியேட்டர்களில் எண்ணிக்கை குறைந்துவிடுவது இயல்பு. தனித்தனியாக படங்கள் ரிலீஸானால் தியேட்டர்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கும், வசூலும் வாரிக்குவிக்கும் என்று திட்டமிட்டு செயல்பட்டது ‘ஸ்கெட்ச் ‘பட தயாரிப்பு தரப்பு. விக்ரமும், ‘ஸ்கெட்ச் ‘ படத்தின் தயாரிப்பும் இணைந்து, கலந்துபேசி விஜய்யின் ‘மெர்சல்’ படத்துக்குப் போட்டியாக களமிறங்க வேண்டாம் என்று முடிவுசெய்து இருக்கிறார்கள். ஆக ‘மெர்சல்’ தீபாவளிக்கும், ‘ஸ்கெட்ச் ‘ இன்னொரு நாளிலும் தனித்தனியாக ரிலீஸாகப்போகிறது.