தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்புலம் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உயர்ந்தவர் நடிகர் விக்ரம். விக்ரம் அவர்கள் முன்னணி நடிகராக ஆகுவதற்கு சில ஆண்டுகள் போராடினார். இவர் சினிமாவில் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து தான் வந்தார். விக்ரம் அவர்கள் முதன் முதலில் விளம்பரங்களில் தான் நடித்தார். அதற்கு பின் இவர் என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
ஆனால், ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. பின் இவர் தொலைக்காட்சி தொடர்கள், பிற நடிகர்களுக்கு டப்பிங் பேசுதல் என்று சினிமாவிலேயே போராடி இருந்தார். மேலும், பல வருடங்கள் போராடிய விக்ரமுக்கு சேது படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த தில், ஜெமினி, தூள், சாமி, போன்ற பல படங்கள் தொடர்ந்து வெற்றி படமாக அமைந்தது.
தற்போது விக்ரம் அவர்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். இந்நிலையில் இன்று சியான் விக்ரம் அவர்களின் பிறந்த நாள். இதனால் சமூக வலைத்தளங்களில் எல்லாம் ரசிகர்கள் சீயான் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரமின் மகன் துருவ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விக்ரம் அவர்கள் தன்னுடைய ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நடித்த படங்களின் தொகுப்பை ஒன்றாக இணைத்து போட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்ய வர்மா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தை தமிழில் ரீமேக் செய்தது தான் “ஆதித்ய வர்மா” படம். இந்த படத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், பனிதா சந்து, ராஜா, அன்புதாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். நடிகர் விக்ரம் அவர்கள் தற்போது கோப்ரா என்ற படத்தில் வித விதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது என்றும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.