விமல் நடித்துள்ள குலசாமி படம் எப்படி ? முழு விமர்சனம் இதோ.

0
878
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் விமல் இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் குலசாமி. இந்த படத்தை இயக்குனர் குட்டி புலி சரவண சக்தி இயக்கியகிறார். இந்த படத்தில் தன்யா ஹோப், வினோதினி, கீர்த்தனா, போஸ் வெங்கட், முத்துப்பாண்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். விமலின் நடிப்பில் வெளியாகிருக்கும் குலசாமி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஆட்டோ ஓட்டுநராக விமல் இருக்கிறார். அப்போது பாலியல் வன்கொடுமைகளை செய்யும் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்கிறது. பின் அவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனையும் வாங்கி தருகிறார்கள். இருந்தாலும், அந்த குற்றவாளிகளை கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு எல்லாம் ஆட்டோக்காரரான விமல் தான் காரணம் என்று போலீஸ் அவரை கைது செய்கிறது.

- Advertisement -

ஆனால், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் விமலை நீதிமன்றம் விடுவித்து விடுகிறது. அதற்கு பிறகும் தொடர்ந்து கொலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை கொடுப்பது யார்? அந்த கொலைகளுக்கும் விமலுக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதி கதை. வழக்கம்போல் விமல் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார். முதல் முறையாக ஒரு ஆக்சன் படத்தில் விமல் நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

கதாநாயகியாக வரும் தன்யா ஹோப் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம். விமலின் தங்கையாக கீர்த்தனா நடித்திருக்கிறார், கல்லூரி பேராசிரியராக வினோதினி, போலீஸ் அதிகாரியாக போஸ் வெங்கட் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. மேலும், ஆக்சன் காட்சிகள் படத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. ஆனால், பாடல்கள் தான் பழைய ராகமாகவே இருக்கிறது.

-விளம்பரம்-

பின்னணி இசை என்ற பெயரில் அதிகப்படியான சத்தம் கேட்பது தவிர காட்சிகளில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை எந்த ஒரு சுவாரசியமும் இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் கொடூரமான மரண தண்டனையை சரி என்பதை இயக்குனர் ஆழமாக சொல்லி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் எடுத்திருக்கிறார்கள். கதைக்களத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும். சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்சன் காட்சியை காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் படத்தின் மேகிங்கிலும் கூடுதல் கவனம் வேண்டும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது

பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக கொண்ட உண்மை சம்பவ கதை

குறை:

கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எந்த ஒரு சஸ்பெண்ஸ் எதுவுமே இல்லை

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

பாடல்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

மொத்தத்தில் குலசாமி- படக்குழுவுக்கு கை கொடுக்கவில்லை.

Advertisement