முதன் முறையாக வருங்கால மனைவியுடன் ஜோடியாக புகைப்படம் எடுத்து வெளியிட்ட விஷால்.!

0
1067

பிரபல நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வகிக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் செய்திகள் வெளியாயின.

நடிகை வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று சமீபத்தில் அதை மறுத்திருந்தார். மேலும், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். நடிகர் சங்க கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் விஷால் ஆந்திராவை சேர்ந்த நடிகையயை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியது. அதே போல அவரின் வருங்கால மனைவியின் புகைப்படம் இது தான் என்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு செய்திகளும் பரவியது.

இந்நிலையில் இந்த அணைத்து குழப்பங்களுக்கும் முடிவுகட்டும் வகையில் தனது வருங்கால மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை விஷாலே வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement