பொதுவாக நடிகர்களுக்கு பட்டப் பெயர் வைத்தால் அது யாருக்கும் கொடுக்காத பட்டமாக தான் இருக்கும். சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் என்று பல ஸ்டார்கள் ஒரு புறம் இருந்தாலும், இளைய தளபதி, புரட்சி தளபதி, சின்னத்தளபதி என்று தளபதிகளுக்கும் தமிழ் சினிமாவில் பஞ்சம் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் இளைய தளபதி என்ற பட்டத்திற்கு பின்னால் இருக்கும் கதையை சொல்லி புலம்பினார் சித்தப்பு சரவணன்.
அதாவது இளைய தளபதி என்ற பட்டம், விஜய்க்கு முன்பாக தனக்கு தான் அந்த பட்டம் முதலில் இருந்தது என்று கூறியியிருந்தார் சரவணன். இதுகுறித்து, 90-களின் இடைப்பட்ட காலம் இருக்கும், நம்ம ஊரில் இருந்து ஒருத்தன் சினிமாவிற்கு போய்யிருக்கான் என்று எனக்கு சேலத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் சேலம் தி.மு.க-வுல பெரிய ஆள் வீரபாண்டி ஆறுமுகம் வந்திருந்தார். அந்த கூட்டத்தில் `இளைய தளபதி’ன்னு கொடுத்துடலாம்’னு முதன்முதலா அந்த வார்த்தையை உச்சரிச்சு எனக்கு அவர்தான் என்று கூறியுள்ளார் சரவணன்.
மேலும், பட வாய்ப்புகள் குறைஞ்சதால இந்தப் பட்டத்தை நானும் அப்படியே மறந்துட்டேன். இந்தச் சூழல்லதான் திடீர்னு நடிகர் விஜய் ஹீரோவா நடித்த ஒரு படத்துல அவருடைய பெயருக்கு முன்னாடி `இளைய தளபதி’ பட்டத்தைப் பார்த்தேன். பார்த்ததும் எனக்கு ஷாக். உடனே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபீஸ்க்கே நானும் என்னுடைய அண்ணனும் நேர்ல போய்ச் சந்திச்சு, `எங்க டைட்டிலை ஏன் சார் பயன்படுத்தறீங்க’னு கேட்டோம். அதற்கு அவர், `உங்களுக்குப் படம் வந்தா நீங்க போட்டுக்கங்க’ன்னு சொன்னார் என்று கூறியிருந்தார் சரவணன்.
இந்த பஞ்சாயத்து ஒரு புறம் இருக்க, தற்போது தமிழ் சினிமவில் ‘புரட்சி தளபதி ‘ என்ற அழைக்கப்படும் விஷாலின் இந்த புரட்சி தளபதி என்ற பட்டம் முத்ன் முதலில் நடிகர் அருண் விஜய்க்கு தான் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது 1996 ஆம் ஆண்டு பிரியம் படத்தின் போதே அருண் விஜய்க்கு இந்த பட்டம் இருந்திருக்கிறது. ஆனால், அந்த பட்டத்தை அருண் விஜய் தற்போது பயன்படுத்துவது கிடையாது. சரவணன் – விஜய் போல அருண்விஜய் – விஷாலுக்கு இடையில் என்ன வரலாறு இருக்கிறது என்பது தான் மிகப்பெரிய கேள்வியே.