விஷ்ணு விஷாலின் எப் ஐ ஆர் படத்திற்கு தடை விதித்த நாடுகள். விளக்கம் கொடுத்த இயக்குனர்- பின்னணி என்ன?

0
668
- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தை மலேசியா, குவைத், கத்தார் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எப்ஐஆர். எப்ஐஆர் என்றால் ‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’ என அர்த்தம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தினை கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடித்து உள்ளனர்.

- Advertisement -

எஃப் ஐ ஆர் படம் பற்றிய தகவல்:

இவர்களுடன் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணு விஷால் திரைப் பயணத்தில் முக்கிய படமாக எஃப்.ஐ.ஆர் அமைந்திருக்கிறது. அந்த அளவிற்கு படத்தில் விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், ஆக்ஷன், த்ரில்லர், தோல்வி, காதல், பாசம் என அனைத்தையும் விஷ்ணு விஷால் ஸ்கோர் செய்துள்ளார். படத்தில் தீவிரவாதத்தை பற்றியும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத சாயத்தை பூசுவது பற்றியும் பேசியுள்ளது.

எஃப் ஐ ஆர் படம் தடைக்கு விளக்கம் கொடுக்கும் இயக்குனர்:

இந்த படம் ஆக்ஷன், த்ரில்லர் படங்களை விரும்புவோருக்கு மட்டுமில்லாமல் அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷால் அவர்கள் இர்ஃபான் அஹமத் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து, நடித்து இருக்கிறார். இந்த படம் 22 கோடிக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் மலேசியா, குவைத், கத்தார் போன்ற சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து இயக்குனர் மனோ ஆனந்திடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

எஃப் ஐ ஆர் படம் தடைக்கான காரணம்:

எஃப் ஐ ஆர் படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எங்கள் படத்தை மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை பண்ணியிருக்காங்க என்று சொல்வது தவறு. அங்கெல்லாம் எங்க படம் சென்சார் செய்யப்படவில்லை. படத்தில் இஸ்லாம் உள்பட சில வார்த்தைகள் இடம் பெற்றாலே அங்கே அவர்கள் தணிக்கை செய்ய மாட்டார்கள். இது போன்ற விஷயங்களாலே மேற்கண்ட நாடுகளில் எங்கள் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை என்று கூறினார்.

விஷ்ணு விஷால் டீவ்ட்:

இப்படி இயக்குனர் மனு ஆனந்த் அளித்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் மலேசியா, குவைத், கத்தார் ஆடியன்ஸ் மன்னிக்கவும் என்று பதிவிட்டிருக்கிறார். இவரின் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலானது. அதோடு இவர் எப் ஐ ஆர் படத்தை புரமோட் செய்யும் போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை இர்ஃபான் அஹமத் என்று மாற்றம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement