பிக் பாஸ் ஃபைனலுக்கு ஓவியா ஒரு பிளான் வைச்சிருக்காங்க!-பிரியங்கா

0
1650
Oviya

ஓவியா ஆர்மியில் நானும் ஒருத்தி. நேற்று ஓவியாவை சந்திச்சுப் பேசினதும், செல்ஃபி எடுத்துகிட்டதும் செம்ம ஹேப்பி. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனலில் கலந்துக்கிட்டு, ஓவியாவுடன் இன்னும் நிறைய விஷயங்களைப் பேசப்போறேன்” – உற்சாகமாகப் பேசுகிறார், தொகுப்பாளினி பிரியங்கா.

ஓவியாவுடன் பிரியங்கா

தமிழில் ‘பிக் பாஸ்’ ஆரம்பமானதும், ரொம்பவே எதிர்பார்ப்போடு இருந்தேன். பிடிச்ச, பிடிக்காத விஷயங்களை ரொம்பவே வெளிப்படையா சொன்ன ஓவியாவின் செயல்பாடுகள் ரொம்பவே பிடிச்சுப்போய், ஓவியாவின் ஆர்மியானேன். அவங்களுக்கு நிறைய ஓட்டிங் பண்ணினேன். ‘தலைவி வாழ்க’னு அவங்களுக்காக போஸ்ட் போட்டுட்டே இருப்பேன். ஓவியா ‘பிக் பாஸ்’ல இருந்து வெளியேறினப்போ ரொம்பவே ஃபீல் பண்ணினேன்.

இதையும் படிங்க: இவர்தான் ஓவியாகுக்கு பிடித்த பிக் பாஸ் போட்டியாளரா.?

ரெண்டு நாளைக்கு முன்னாடிதான், ‘நிகழ்ச்சியை நீங்க தொகுத்து வழங்கணும்’னு சொன்னாங்க. நேற்றைக்கு சில நிகழ்ச்சிகளில் கமிட் ஆகியிருந்தாலும், ‘ஓவியாவுக்காக நிச்சயாமா ஆங்கரிங் பண்றேன்’னு சொன்னேன். நேற்று ஓவியா சாப்பிடுறப்போ, ‘வடை இருக்கா… வடை’னு ரொம்பவே க்யூட்டாகச் சொன்னாங்க. ‘எவ்ளோ பெரிய மாஸ் ஆகிட்டாங்க. ஆனாலும், ரொம்பவே சிம்பிளா இருக்கிறாங்களே’னு ஆச்சர்யப்பட்டேன்.

ஓவியா

என்னால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல். அதனால் என்ன? இனிமேல் என்னை சினிமாவில் பார்க்கலாம். கண்டிப்பா ‘பிக் பாஸ்’ ஃபைனலுக்கு வருவேன்னு சொல்லிட்டு, ஃபைனலுக்குப் பிறகு ரசிகர்களிடம் மனம்விட்டு பேசப்போறேன்’னு சொன்னாங்க. அவங்களோட பிளான் தெரிஞ்சதுலேருந்து நான் செம குஷியா இருக்கேன்.

Image result for oviya in saravana stores

இந்த வாரத்துடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடியப்போகுது. நிகழ்ச்சியின் ஃபைனல் நாளில் ரிசல்ட் அறிவிக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஓவியாவை போட்டியாளராக்கி, ஓட்டிங்கை ஸ்டார்ட் பண்ணினாலும் அவங்கதான் வின் பண்ணுவாங்கனு நான் உறுதியா நம்புறேன். அவங்க ‘பிக் பாஸ்’ வின்னர் என்பதைவிட, மக்கள் எல்லோரின் மனசையும் ஜெயிச்சதுதான் பெரிய விஷயம்” என்று சிரிக்கிறார் பிரியங்கா