‘சமூக வலைத்தளத்தில் என்னால் ஷிவாங்கி விமர்சிக்கப்பட்ட போது’ – Elimination-க்கு பின் ஷிவாங்கி குறித்து Liveல் பேசிய vj விஷால்.

0
775
Vjvishal
- Advertisement -

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் vj விஷால் வெளியேறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஷிவாங்கியை காப்பற்றவரே vj விஷால் வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் விஷால். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது நான்கவது சீசன் வரை வெற்றிகரமாக கடந்து வந்து இருக்கிறது. இந்த நான்காவது சீசனில் குக்குகளாக ஷெரின், விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, நாய் சேகர் இயக்குனர் கிஷோர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருந்தனர். அதிலும் கடந்த 3 சீசன்களாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீஸனின் குக்காக என்ட்ரி கொடுத்த ஆச்சரியப்பட வைத்தார்.

- Advertisement -

இந்த சீசனில் இதுவரை கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பன் என்று பலர் வெளியேறி இருக்கின்றனர். ஆனால், கடந்த வாரம் vj விஷால் வெளியேறியது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் கடந்த 3 சீசன்களாக சமையல் பொருட்கள் பற்றி கூட தெரியாத ஷிவாங்கி எப்படி இவ்வளவு சூப்பராக சமைக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்தார் ஷிவாங்கி.

அதில் ‘இந்த சீசன் துவங்கியதிலிருந்து நான் எப்படி சமைக்கிறேன் என ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி செய்தேன். நான் மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எல்லோரும் அப்படித்தான். எங்களின் பெஸ்ட்டை வெளிக்கொண்டுவர நிறைய தியாககங்கள் செய்கிறோம். கோமாளிகளும் அவர்களது கெட்டப்பிற்காக நிறைய பயிற்சி செய்கிறார்கள். உங்களை மகிழ்விக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்.

-விளம்பரம்-

இந்த ஷோவை உள்ளபடியே பார்த்து மகிழுங்கள். ஒருவரை குறைவாக மதிப்பிடுவது ஈஸி. நல்ல நாளாக இருந்து என் கடின உழைப்பு கைகொடுத்தால் நான் செய்யும் உணவு சிறப்பாக வரும். அப்படி இல்லையென்றால் அது எனக்கான நாள் இல்லை. நான் புதிதாக கற்றுக்கொள்ளவும் மகிழ்ச்சியாக இருக்கவுமே வந்தேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் எலிமினேஷனுக்கு பின்னர் லைவ் ஒன்றில் வந்தார் விஷால்.

அப்போது பேசிய அவர் ” இங்கு யாரும் புரோபோசனல் குக்ஸ் கிடையாது. அந்த நாளின் என்ன நடக்கிறதோ அதை பொறுத்து தான் எல்லாம். இதற்கு யாரும் காரணம் இல்லை. சிவாங்கியுடன் இப்படி ஒரு நட்பு ஏற்படும் என்று நான் நினைக்கவே இல்லை நீ என்னுடன் வைத்த நட்பிற்கு நன்றி சமூக வலைதளத்தில் என்ன விமர்சனம் வந்தாலும் அதை எளிதாக எடுத்துக்கொண்டு என்னிடம் அதைப் பற்றி எதையும் கேட்டது கிடையாது. இதை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி மட்டும் சொல்கிறேன் இது சாதாரண விஷயம் தான்’ என்று கூறியுள்ளார்.

Advertisement