நான் சினிமாக்காரன் என்று வீடு கூட வாடகைக்கு தரவில்லை என்று நடிகர் யுகேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் யுகேந்திரனும் ஒருவர். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பின்னணி பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்த மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார். மேலும், யுகேந்திரன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார்.
இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் இவர் சில படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும், இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து இருக்கிறார். அதிலும், குறிப்பாக இவர் தளபதி விஜயுடன் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.
யுகேந்திரன் அளித்த பேட்டி:
பின் சில வருடங்களாகவே இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவரை குறித்து எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நடிகர் யுகேந்திரன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் மற்றும் குடும்ப குறித்து கூறியிருந்தது, நான் சினிமாவில் நடித்து 8 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு பெரிய கேப் விழுந்து விட்டது. அதற்கு காரணம் என்னுடைய குடும்பம் தான். என்னுடைய மனைவி பிஎச்டி படிக்க வேண்டும் என்று சொன்னதால் நாங்கள் நியூஸ்லாந்து சென்று விட்டோம்.
அஜித்-விஜய் குறித்து சொன்னது:
அதோடு நான் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். அதிலே பிசியாக இருந்து விட்டேன். அதனால் நடிக்க வர முடியவில்லை. தற்போது நான் மீண்டும் கம்பேக் கொடுக்க வந்திருக்கிறேன். காரணம், என்னுடைய மனைவி படித்து முடித்து விட்டார். என்னுடைய மூன்று பிள்ளைகளும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராக இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அதேபோல் நான் விஜய், அஜித் ஆகியோர் படங்களில் நடித்திருக்கிறேன்.
சினிமாவால் பட்ட கஷ்டம் குறித்து சொன்னது:
அவர்களை சந்திக்க முயற்சித்தேன். தற்போது அவர்கள் மிகப் பிரபலமாக இருப்பதால் அவர்களை சென்றடைய நிறைய ஸ்டெப்ஸ்களை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. அவர்களே விருப்பப்பட்டால் கூட உடன் இருப்பவர்களால் பார்க்க முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அதோடு ஒரு காலத்தில் சினிமாக்காரர்கள் என்றால் வீடு கூட தர மாட்டார்கள். இது என்னுடைய அப்பாவிற்கும் நடந்திருக்கிறது. எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால், தற்போது அந்த நிலைமை மாறி இருப்பதை நினைத்தால் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.