கல்லூரி விழாவில் மாணவி ஒருவர் லோகேஷ் கனகராஜ் காலில் விழுந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது.ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார். பின் இவர் சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை தன்னுடைய நண்பருடன் இணைந்து 80 ஆயிரம் ரூபாய் பண செலவில் ஒரு “களம்” என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார்.
Lokesh Reaction 😂#leo #LeoFilm #LokeshKanagaraj #LCU #lokivers #ThalapathyVijay #ThalapathiVijay𓃵 #bloodysweet #Lokesh pic.twitter.com/AzrpCRE4r9
— 🫘🍫🥷🏽🦅𝐁𝐋𝐎𝐎𝐃𝐘𝐒𝐖𝐄𝐄𝐓🍫🗡️😋ⓁⒺⓄ💯🔥🧊𓃵 (@BloodySweettleo) July 20, 2023
அந்த குறும்படத்தை கார்த்திக் சுப்புராஜின் “அவியல்” குறும்பட தொகுப்பு திரைப்படத்தின் மூலம் வெளியிட்டார். பின் “மாநகரம்” என்ற படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார்.அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ்.
இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.மேலும் இப்படத்தில் விக்ரம் பட நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2K Boomers:
— Blue Sattai Maran (@tamiltalkies) July 22, 2023
லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அம்மாணவியை கடிந்து கொண்டார். கல்லூரி வளாகத்தினுள்… பட ப்ரமோஷனுக்காக திரைப்பட கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை.
இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகிறதோ!!#LokeshKanagaraj pic.twitter.com/MTzUpN1ElP
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதை அடுத்து ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவிக்கு லோகேஷ் பரிசு கொடுக்கும் போது அந்த மாணவி திடீரென லோகேஷின் காலில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பாராத லோகேஷ் ஒரு கனம் டென்சன் ஆகி அந்த மாணவியை கையை காட்டி ஏம்மா என்று கூறினார்.
Lokesh kanagaraj dream project IRUMBU KAI MAYAVI @Dir_Lokesh @Suriya_offl Loki sambavam start pic.twitter.com/Pa9F0nIJ38
— Lokesh kanagaraj Lokesh kanagaraj (@LKanagaraj70374) July 20, 2023
இந்த நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து அந்த மாணவியை விமர்சித்துள்ள விமர்சகர் மற்றும் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் ‘லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அந்த மாணவியை கடிந்து கொண்டார். கல்லூரி வளாகத்தின் உள்ளே பிரமோஷனுக்காக திரைப்படக் கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை, இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறபோகிறதோ” என்று பதிவிட்டுள்ளார்.