விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, யாருக்கு சாதகமாக அமைந்ததோ இல்லையோ அது ஓவியாவின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓவியாவிற்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் கூடி இருக்கிறது. அவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். அந்த அளவிற்கு அவர் மீது ரசிகர்கள் அன்பு வைத்துள்ளனர்.
ஓவியா வெளியேறியதிற்கான முக்கிய காரணம் அவர் ஆரவ்வின் மீது கொண்ட காதல். அதை ஓவியா கமல் முன்னிலையில் ஒத்துக்கொண்டார், அதோடு வெளியேறிய பிறகும் ரசிகர்களிடம் வெளிப்படையாக கூறினார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக “ஆரவ்வின் அம்மாவும் ஓவியாவை தனது மருமகளாக ஏற்று கொண்டதாகவும், ஆரவ் விருப்பப்பட்டால் ஓவியாவையே தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்துவிட்டதாகவும்” சமூக வலைத்தளங்களிலும் ஒருசில இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த செய்தியை முற்றிலும் ஆரவ்வின் அண்ணன் மறுத்துள்ளார். இதுகுறித்து ஆரவ்வின் அண்ணன் நதீம் கூறியபோது, “இந்த செய்தி, முற்றிலும் வதந்தி. அம்மா யாரிடமும் அப்படிக் கூறவில்லை. இது முற்றிலும் தவறான செய்தி. யாரோ எங்கள் அம்மா கூறியதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி இருக்கின்றனர்” என்று கூறினார்.
உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்