நல்லா கேளுங்க அது ‘அல்லேலூயா’ – முதல்வன் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் செய்த வேலையை போட்டுடைத்த பாடகர்.

0
5799
Harris
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் பல தமிழ் திரைப் படங்களுக்கு பின்னணி இசையும், பாடல்களும் அமைத்து உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களுக்கும் இசை அமைத்து உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் 2001 ஆம் ஆண்டு “மின்னலே” என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக சினிமா துறையில் கால் பதித்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, ஷாம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். இவரின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் மற்ற இசையமைப்பாளர்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட வகையில் இருப்பது ரசிகர்களுக்கு பிடித்து இருந்தது. இவர் ஆரம்பத்தில் ஏ ஆர் ரஹ்மானுடன் கூட பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

படையப்பா படத்தில் ஆஸ்கார் புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பார். இந்த படத்தில் ரஜினிக்கு வரும் தீம் மீயூசிக் இப்போது கேட்டாலும் கூட நமக்கு புல்லரிக்கும் வகையில் இருக்கும்.அந்த படத்தில் நீண்ட காலம் கழித்து நீளம்பரியை பார்க்க செல்லும் சூப்பர்ஸ்டார், நீலாம்பரியால் உட்கார சேர் இல்லாமல் நிற்க வைக்கப்படுவார். அந்த சமயத்தில் மேல் இருக்கும் ஊஞ்சலை தன் துண்டால் கீழிறக்கி செம்ம ஸ்டைலாக அமர்வார் சூப்பர்ஸ்டார்.

இந்த சீனில் செம்மையாக ஒரு தீம் மியூசிக் வரும். இந்த தீம் மியூசிக்கை, ஏ.ஆர் ரஹ்மான் போடவில்லை, அவருக்கு உதவியாக பணிபுரிந்து வந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் அந்த தீம் மியூசிக்கை போட்டது என சமீபத்தில் கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அதே போல ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த முதல்வன் படத்தில் கூட ஹாரிஸ் ஜெயராஜ் பணியேற்றி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற முதல்வனே பாடலில் ஹாரிஸ் ஜெயராஜ் செய்த சிறப்பான சம்பவம் குறித்து பாடகர் தேவன் ஏகாம்பரம் கூறியுள்ளார். இந்த பாடலின் நடுவே ஒரு புரியாத பாடல் வரிகள் வரும். இதுநாள் வரை அதன் அர்த்தம் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஆனால், உண்மையில் அந்த வரி ‘அல்லேலூயா’ வாம். அதனை ப்ரோக்ராம் செய்தது ஹாரிஷ் ஜெயராஜ் தானாம்.

அதே போல விக்ரம் படம் வெளியான போது சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற பாடல் மீண்டும் படு ஹிட் ஆனது இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ் ”சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் ப்ரோகிராமிங் செய்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், ” ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’, திரு.ஆதித்தன் இசையமைத்து, நான் ப்ரோகிராம் செய்த இந்த விண்டேஜ் பாடல் வைரலாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் ” எனக் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement