அஜித், சிவா இயக்கத்தில் நடித்த காரணம் இதான்.! ரகசியத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்.!

0
486

அல்டிமேட் ஸ்டார் அஜித் சிவா இயக்கத்தில் இதுவரை வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என்று நான்கு படத்தில் நடித்து விட்டார். இதுவரை எந்த ஒரு இயக்குனருடன் நடிகர் அஜித் தொடர்ந்து நான்கு படத்தில் நடித்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

K Rajan @ Producer Radhakrishnan Team Press Meet Stills

வவிஸ்வாசம் திரைப்படத்துக்கு முன்பாக இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான விவேகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை பெறவில்லை. இதனால் இனி சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கக்கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் இவர்கள் கூட்டணியில் விசுவாசம் திரைப்படம் உருவானது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காதது போல இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனால் விஸ்வாசம் திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் அஜித்-சிவா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகும் என்றும் அறிவித்து இருந்தது. ஆனால், அஜித் வேதாளம் படத்தில் கமிட் ஆனதற்கு காரணமே வேறு.

வேதாளம் படத்தை ஏ எம் ரத்னம் தான் தயாரித்திருந்தார். இவர், அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தையும் தயாரித்திருந்தார். என்னை அறிந்தால் படம் பெரும் நஷ்டத்தை சந்திக்கவே தயாரிப்பாளரின் நலனுக்காக அஜித், சிவா இயக்கத்தில் வேதாளம் படத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த தகவலை பிரபல வினியோகஸ்தரான கே ராஜன் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்