கேப்டனுக்கு 30 ஆண்டுகளாக விஸ்வாஸமாக இருக்கும் தளபதி – என்ன காரணம் தெரியுமா?

0
275
- Advertisement -

விஜயகாந்த்- விஜய் இருவருக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படத்தின் வெற்றி விழா குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் 540 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதனால் லியோ வெற்றியை சிறப்பாக கொண்டாட செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் முடிவு செய்தது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்தி இருக்கிறார்கள். இந்த விழாவில் விஜய், லோகேஷ், திரிஷா உட்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

லியோ வெற்றி விழா:

மேலும், லியோ படத்தின் விழாவில் விஜய் பல விஷயங்களை பேசியிருந்தார். அது சோசியல் மீடியாவில் தற்போது பேசும் பொருளாக இருக்கிறது. அதில் ஒன்று தான், புரட்சித்தலைவர் என்றால் அது ஒருத்தர் தான், நடிகர் திலகம் என்றால் அது ஒருத்தர் தான், புரட்சி கலைஞர் கேப்டன் என்றால் அது ஒருத்தர் தான், உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான், தல என்றால் ஒருத்தர் தான் என்று பேசியிருக்கிறார். இப்படி எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு விஜய் அவர்கள் கேப்டன் விஜயகாந்த் பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

விஜயகாந்த்-விஜய் உறவு:

அதாவது, விஜயகாந்த்-எஸ்ஏசி இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட காரணம் 1980களில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனராக வேண்டும் என்றும், விஜயகாந்த் ஹீரோவாக வேண்டும் என்றும் கோடம்பாக்கத்தில் உள்ள பல கம்பெனிகளில் ஏறி இறங்கி இருந்தார்கள். அப்போதுதான் இவர்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு தான் சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் உருவானது. இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாத இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்த படம் வெற்றி அடைந்தது அடுத்து இன்று வரைக்கும் எஸ்ஏசி தான் எங்க டைரக்டர் என்று விஜயகாந்த் சொல்லுவாராம்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு இவர்கள் நட்பு இருந்தது. இவர்கள் இணைந்து 15 வருடங்களுக்கும் மேலாகவும் பணியாற்றியிருந்தார்கள். இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்கள் எல்லாம் வெளியாகியிருந்தது. இந்த படங்களிலும் விஜய் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு விஜய் வைத்து எஸ் ஏ சி இயக்கிய முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு விஜய்யும் விஜயகாந்த்தையும் வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்தார் எஸ்ஏசி. அப்போது விஜயகாந்த் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். இதனால் தன்னுடைய மகனுடைய எதிர்காலமும் மாறும் என்று நினைத்து இயக்குனர் எஸ்ஏசி கேட்டவுடனே விஜயகாந்த் ஒத்துக்கொண்டார்.

அதற்குப் பிறகுதான் செந்தூரப்பாண்டி படம் உருவானது. அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எஸ்ஏசி நினைத்தது போலவே விஜய்க்கு ஒரு பெரிய ரீச்சை இந்த படம் பெற்றுத் தந்தது. விஜயகாந்திற்கு தம்பியாக விஜய் நடித்ததன் மூலமாக விஜய்க்கு ரசிகர்கள் அறிமுகமானர்கள். இதைப் பேட்டியிலேயே விஜய் ஒருமுறை கூறியிருக்கிறார். என்னை மாஸ் ஆடியன்ஸ் நடிகராக ஏற்றுக் கொண்டதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை விஜய் விசுவாசத்தோடு தான் விஜயகாந்துக்கு இருக்கிறார். அந்த வெளிப்பாடாகத்தான் லியோ வெற்றி விழாவில் கமல், ரஜினி பெயர்களை சொல்வதற்கு முன்பாக விஜயகாந்தின் பெயரை சொல்லிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சங்கத்திற்காக அவர் நடத்திய கலை நிகழ்ச்சிகள் எல்லாம் விஜய் தன்னுடைய ஆதரவை கொடுத்திருந்தார்.அதோடு விஜயகாந்தின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி தான் விஜய்க்கும் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement