அந்த மாதிரியான வெப் செரிஸ், 26 வயது இளஞரை மிரட்டி நடிக்க வைத்த பெண் இயக்குனர் கைது. கேரளாவில் பரபரப்பு.

0
1408
- Advertisement -

கேரளா மாநிலத்தில் இளைஞரை ஆபாச படத்தில் நடிக்க கூறி பெண் இயக்குனர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மலையாள வெப் சீரிஸ் இயக்குனர் ஸ்ரீ ல பி.மணி என்ற லட்சுமி தீப்தா. இவர் பால் பாயாசம், நான்ஸி, ஷெலின்றெ டியூஷன் கிளாஸ், போன்ற ஆபாச 18+ வெப் சீரிஸ்களை இயக்கியவர். இவர் இயக்கிய சீரிஸ்களில் அதிகமான அந்தரங்கம் மற்றும் 18+ காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர் திருவனந்தபுரம் வெங்கானூரைச் சேர்ந்த 26வயதாகும் இளைஞர் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று இருந்திருக்கிறார். இப்படி அவர் இருக்கும் போதுதான் ஆபாச பட இயக்குனராக இருக்கும் லட்சுமி தீப்தாவுடன் அந்த இளைஞருக்கு எப்படியோ தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர் ஆபாச பட இயக்குனர் என்று அந்த இளைனருக்கு தெரியவில்லை. இந்நிலையில் இயக்குனர் லட்சுமி தீப்தா சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

ஒப்பந்தத்தில் கையெழுத்து :

சினிமாவில் நடிக்கிறோம் என்ற ஆசையில் அந்த இலைஞரும் சென்றிருக்கிறார். பின்னர் அந்த இளைஞரை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி அருவிக்கரை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே ஆட்கள் நடமாட்டமே இடத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு அந்த இளைஞரை இயக்குனர் லட்சுமி தீப்தா அழைத்து சென்றிருக்கிறார். அங்கு லட்சுமி தீப்தா ஆட்கள் சில காட்சிகளை கூறி நடிக்க சொல்லியிருக்கின்றனர். மேலும் அதனை கேமிராவிலும் பதிவு செய்திருக்கின்றனர்.

மிரட்டிய இயக்குனர் :

அதற்கு பிறகு லட்சுமி தீப்தா அந்த இளைஞரை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட சொல்லி சில காட்சிகளில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் சில காட்சிகளுக்கு பிறகுதான் அது ஆபாச படம் என்று அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் அந்த சீரிஸில் இருந்து விலக முயற்சி செய்ய இயக்குனர் லட்சுமி தீபதா அந்த ஒப்பந்தத்தை காட்டி நடிக்க வில்லை என்றால் இழப்பீடு தர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறி மிரட்டவே அந்த இளைனரும் எந்த வழியும் இல்லாமல் நடித்து கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

போலீஸில் புகார் :

இந்த நிலையில் தான் திருவனந்தபுரம் வெங்கானூரைச் சேர்ந்த 26வயதாகும் அந்த இளைஞர் அருவிக்கரை போலீஸில் புகாரளித்துளார். அவர் கொடுத்த புகாரில் “தன்னை இயக்குனர் லட்சுமி தீபதா ஆபாச படத்தில் நடிக்க வில்லை என்றால் பண இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று மிரட்டி ஆபாச காட்சியில் நடிக்க வைத்ததாகவும், அந்த சீரிஸ் வெளியில் வந்தால் என்னுடைய எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் புகாரளிக்க இயக்குனர் லட்சுமி தீபதாவை போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமின் :

கைது செய்யப்பட்ட பெண் இயக்குனர் லட்சுமி தீபதா நெடுமங்காடு நீதிமன்றத்தில் ஆராஜ் படுத்தப்படார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் 6 வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கேட்கும் ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமினில் விடுவித்தது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இளைஞரை ஆபாச படத்தில் நடிக்க கூறி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement