விஜய் அஜித்திற்கு மட்டும் இல்லை யோகி பாபுவிற்கும் இப்படி ரசிகர் இருக்கார் பாருங்க.!

0
339
yogi babu

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போதுவெளியாகும் முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர். 

இதில் காமெடி நடிகர் யோகி பாபு தான் இயக்குனர் மற்றும் ஹீரோக்களின் பர்ஸ்ட் சாய்ஸ். தமிழின் தற்போதய சூப்பர் ஸ்டார்களான விஜய், அஜித் தொடங்கி இளம் நடிகர்களின் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். மேலும், ஒரு சில படத்தில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது தர்மபிரபு, கூர்க்கா போன்ற படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. யோகி பாபுவின் தனி அடையாளம் என்றால் அவரது உருவ அமைப்பும் புதிய வார்த்தைகளும் தான். இதனாலேயே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் யோகி பாபுவின் பெயரை தனது கையில் பச்சை குத்திகொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை கண்ட யோகி பாபு, உங்கள் அன்பிற்கு நன்றி ஆனால், ஆனால், இதெல்லாம் தேவையற்றது என்று மனம் நெகிழ்ந்துள்ளார். யோகி பாபுவிற்கு இப்படி கூட வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்களா என்று வியந்து வருகின்றனர்.