நீ விஜய்யுடன் நடிச்சாலே அது Flop தான் – தளபதி 66 படத்தில் இணைந்த யோகி பாபுவை கேலி செய்த ரசிகர். அதற்க்கு அவரின் பதிலை பாருங்க.

0
414
yogibabu
- Advertisement -

தளபதி 66 படத்தில் இணைந்த யோகி பாபுவை விமர்சித்த ரசிகர்கருக்கு யோகி பாபு கொடுத்த பதில் படு வைரலாகி வருகிறது. சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் யோகி பாபுவிற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-

2009-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ‘யோகி’. பிரபல இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை சுப்ரமண்யம் சிவா இயக்கியிருந்தார். இதில் யோகி பாபு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது தான் அவர் அறிமுகமான முதல் படமாம்.இதனைத் தொடர்ந்து ‘சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, வேலாயுதம், தூங்கா நகரம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், வீரம்’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் யோகி பாபு நடித்திருந்தார்.

- Advertisement -

மீண்டும் விஜய்யுடன் யோகி பாபு :

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல நடிகருடன் நடித்த யோகி பாபு தற்போது விஜய் 66 படத்திலும் இணைந்து உளர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி அந்த படத்தை இயக்கி வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரிக்கிறார்.

தளபதி 66ல் யோகி பாபு :

தற்காலிகமாக ‘தளபதி 66’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக, பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதேபோல் இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் ஷாம் நடிக்கிறார். சீனியர் நடிகரான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குடும்ப பின்னணி படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

-விளம்பரம்-

5வது முறையாக மீண்டும் விஜய்யுடன் :

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் நிறைவடைந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் யோகி பாபு கமிட் ஆகி இருக்கிறார்.  ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் யோகி பாபு பங்கேற்று வருவதாகவும் கூறப்படுகிறது.விஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’, ‘சர்க்கார்’, ‘பிகில்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் யோகி பாபு நடித்திருந்த நிலையில், தற்போது 5வது முறையாக மீண்டும் விஜய்யுடன் நடிக்கிறார்.

ரசிகர் கேலிக்கு யோகி பாபு பதில் :

சமீபத்தில் தளபதி 66 படத்தில் தான் இணைந்து இருப்பதை புகைப்படம் ஒன்றின் மூலக உறுதி செய்து இருந்தார் யோகி பாபு. இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர் ‘நீ விஜய் கூட நடித்த மூன்று திரைப்படங்களும் பிளாப் தான், சர்கார் A.R.முருகதாஸ் அவுட், பிகில் அட்லீ அவுட், பீஸ்ட் நெல்சன் அவுட். அடுத்தும் தொடர்கிறது’ என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள யோகி பாபு “Thankyou Pa” என ரிப்ளை செய்துள்ளார்.


Advertisement