வீட்ல சண்ட, கைல 200 ரூபா பணம், திருத்தணி மலையில் படுத்திருந்தேன் -யோகி பாபு உருக்கம்

0
9323
yogi babu

தமிழ் சினிமாவின் முன்னை காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. ரெமோ, மான் கராத்தே, காக்கி சட்டை என தற்போது வரை தனது கணிசமான படங்களை சிவா கார்த்திகேயனுடன் காமெடி நடிகராக பண்ணியவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் கலக்க காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த தளபதி விஜயின் மெர்சல் படத்தில்லும் நடித்திருந்தார் யோகி பாபு.
yogi babuசினிமாவிற்கு வருவதற்கு முன பல கஷ்டங்களை அனுபத்து கையில் காசு இல்லாமல் பல நாட்களைக் கழித்தேன் என சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்திலும் காமெடியனாக நடித்து வருகிறார்.

“நான் முதலில் ஆர்மிக்கு செல்ல முயற்சி செய்தேன், ஆனால் அது கிடைக்கவில்லை. அப்படி இப்படி கஷ்டப்படு வந்து பல நாட்கள் அழைந்து திரிந்தேன். கடைசியாக என்னிடம் இருந்த வெறும் 200 ரூபாயுடன் பூந்தமல்லி பஸ்டாண்டில் உக்கர்ந்து இருந்தேன்.
Yogi Babuஒரு வாய்ப்பும் கிடைக்காமல் அந்த 200 ரூபாயை எடுத்துக்கொண்டு திருத்தணி மலைக்கு சென்று கடவுளை வேண்டி விட்டு எங்கு செல்வது எனத் தெரியாமல், அங்கேயேபடுத்திருந்தேன். பின்னர் தான் இந்த் வாய்ப்புகள் வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: தலனா ரொம்ப பிடிக்கும், ஆனா நான் தளபதி ரசிகன்! மெர்சல் பாடலை பாடி அசத்திய நடிகர் ?

நான் நம்பிய கடவுள் என்னைக் கைவிடவில்லை. அப்போது தான் ஒரு முறை லொல்லு சபா ஷூட்டிங் பார்க்க அந்த இடத்திக்ரு சென்றேன்.
Yogi Babuஅங்கு என்னை வித்யாசமான ஹேர்ஸ்டைலுடன் இருப்பதைப் பார்த்து நடிக்க கூப்பிட்டனர். அங்கு இருந்து தான் ஆரம்பித்தது என தான் எப்படி சினிமாவிற்குள் வந்தேன் எனக் நெகிழ்ச்சியுடன் கூறினார் யோகி பாபு.

-விளம்பரம்-
Advertisement