பிக் பாஸில் நம்ம பாண்டா யாருக்கு ஆர்மியை ஆரம்பிசிருக்கார்னு தெரிஞ்சா கழுவி ஊற்றுவீங்க.!

0
1618
prasanth

முகநூல்,ட்விட்டர் வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் சிறிதளவு செல்வாக்கு இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வேலையை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்படி யூடுயூப் விமர்சனம் செய்யும் நபர்களில் பிரசாந்த் மிகவும் முக்கியமாணவர்.

மற்ற விமர்சகர்களை விட இவரது விமர்சனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது. இவரது பாண்டா பிரசாந்த் என்று மக்கள் மத்தியில் செல்லப்பெயரை வாங்கிய இவர் சினிமாவில் கூட தனது தடத்தை பதித்து விட்டார்.

- Advertisement -

எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசாந்த் அவ்வப்போது சில சர்ச்சையான டிவீட்களை செய்து வம்பில் மாட்டிக்கொள்வதும் வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அதில்’#vanithaசூசைட்படை, யாரெல்லாம் சேரூகிறீர்கள். நாம் தான் நம் தலைவியை ஆதரிக்க வேண்டும் ‘ என்று குறிப்பிடடுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அதிகம் வெறுக்கப்படுவர் நடிகை வனிதா தான். இந்த அப்படி இருக்க இவருக்கு போய் ஆர்மியை ஆரம்பித்துள்ள பிரசாந்தை வளைதளவாசிகள் கிழித்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement