தமிழ் வாடிக்கையாளரை ஹிந்தி கற்றுக்கொள்ள ஊழியர் – வைரலான ஸ்க்ரீன் ஷாட். சோமாடோ எடுத்த நடவடிக்கை.

0
3583
zomato
- Advertisement -

சொமேட்டோ ஊழியரின் நடவடிக்கைக்கு சொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. காலங்கள் செல்லச் செல்ல நாகரிகமும் மாறிக்கொண்டு வருவது வழக்கம் தான். அதுபோல ஹோட்டலில் சென்று உணவை சாப்பிடும் நிலை மாறி தற்போது உணவு வீட்டுக்கு வரும் நிலை மாறி உள்ளது. அந்த வகையில் பல்வேறு உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் பிரபலமான உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்று தான் சொமேட்டோ.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது இந்த நிறுவனம் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அப்படி என்ன பிரச்சனை என்றால், விகாஸ் என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், இவர் ஆர்டர் செய்த உணவு முழுவதுமாக கிடைக்கவில்லை. இதனால் சொமேட்டோ ஆப் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில் அவர் தனது பணத்தை திருப்பி அளிக்கும்படி கேட்டுள்ளார்.

- Advertisement -

அப்போது அவருக்கு பதிலளித்த சேவை மைய அதிகாரி நீங்கள் உணவு ஆர்டர் செய்த உணவகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், மொழி பிரச்சினையால் எங்களால் இது தொடர்பாக எதுவும் பேச முடியவில்லை என்று பதில் அளித்துள்ளார்.இதனால் கோபமடைந்த விகாஸ் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் தெரியாமல் இருந்தால் எப்படி? தமிழ் தெரிந்த ஒருவரை நீங்கள் வேலைக்கு வைக்க வேண்டாமா? நீங்களே உணவகத்தை தொடர்புகொண்டு என்னுடைய பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

வருத்தம் தெரிவித்த‌ “சொமேட்டோ” நிறுவனம்

அதற்கு சேவை மைய அதிகாரி ஒருவர் தேசிய மொழி ஹிந்தி. இது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தயவு செய்து இந்தி மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று அவருக்கு கூறியிருந்தார். உடனே விகாஸ் அவர்கள் சேவை மைய அதிகாரிக்கும் தனக்குமான உரையாடல்களை சொமேட்டோ நிறுவனம் என்று டேக் செய்து பதிவிட்டார். உடனடியாக சோசியல் மீடியாவில் சொமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக #Reject_Zomato என்று ட்ரெண்டிங் ஆனது. இதனை தொடர்ந்து தங்களது சேவை மைய ஊழியரின் நடவடிக்கை குறித்து சொமேட்டோ நிறுவனம் வருந்துகிறோம் என்றும் அவரை பணியிடை நீக்கம் செய்து விட்டோம் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அந்த அறிக்கையில் சொமேட்டோ நிறுவனம் கூறியது, எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு நாங்கள் வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்மறைக்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நாங்கள் நம்புகிறோம். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரியின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் மொழி செயலியை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உருவாக்கியுள்ளோம். உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிரூத்தை தேர்வு செய்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்டர் சர்வீஸ் உருவாக்கும் பணியிலும் உள்ளோம்.

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்து அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்து உள்ளோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இவர்கள் அறிவித்த அறிக்கை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சம்மந்த பட்ட அந்த நபர், தன் ட்விட்டர் பக்கத்தில் உங்கள் விளக்கத்திற்கு எல்லாம் மேலாக சம்பந்தப்பட்ட அந்த ஊழியரை வேலையில் இருந்து தூக்கியதற்கு பதிலாக அவரை மீண்டும் பணியில் சேர்த்து சரியான பயிற்சி கொடுங்கள் என்பது என்னுடைய கோரிக்கை தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர பழிவாங்கல் அல்ல என்று பாடம்கற்பித்திருக்கிறார்.

Advertisement