இந்தியா vs வங்கதேச போட்டியில் மைதானத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்த பாட்டி யாரு.?

0
2086
Charulatha
- Advertisement -

உலக கோப்பை தொடரில் 40 ஆவது லீக் போட்டி நேற்று (ஜூலை 2) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பங்களாதேஷ் இறுதிவரை போராடி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

-விளம்பரம்-

இந்த போட்டியின் முழுவது வயதான மூதாட்டி ஒருவர் இந்தியாவை உற்சாகபடுத்திக்கொண்டே இருந்தார். கமெண்ட்ரி கொண்டிருந்த பாலாஜி கூட அடிக்கடி ‘பாடிமா, பாட்டிமா’ என்று கூறிக்கொண்டே இருந்தார். மேலும், இந்த மூதாட்டியை அடிக்கடி கேமராவிலும் காண்பித்துக்கொண்டே இருந்தனர்.

- Advertisement -

இந்த போட்டி முடிந்ததும் பிறகு இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சாருலதா போட்டியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் அந்த பாட்டி யார் என்பதை அறிந்து கொள்ள அவரை பேட்டி எடுத்தனர்.  87 வயதான அந்த பாட்டியின் பெயர் சாருலதாவாம்,

இந்த போட்டி முடிந்ததும் பேட்டி கொடுத்த அவர் பேசுகையில் இந்திய அணி 1983ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் பொழுது நான் அந்த மைதானத்தில் இருந்தேன் நான் ஆப்பிரிக்காவில் இருக்கும் போதிலிருந்து பல ஆண்டுகளாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன். நான் முன்பு வேலை செய்து கொண்டிருந்தபோது கிரிக்கெட்டை டிவியில் பார்த்து கொண்டிருந்தேன். தற்போது பணி ஓய்வு பெற்று விட்டேன். அதனால் நேரில் கிரிக்கெட்டை பார்த்து ரசித்து வருகிறேன். கண்டிப்பாக இந்த உலக கோப்பையில் இந்திய அணி வெல்லும். இந்திய அணி வெற்றி பெற நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

-விளம்பரம்-

Advertisement