கோபால் பல்படி முதல் பூஸ்ட் வரை – 90ஸ் கால விளம்பரங்கள் ஒரு லிஸ்ட். உங்கள் Favourite எது ?

0
757
Ad
- Advertisement -

இன்றைய காலகட்டங்களில் பொழுது போக்குவதற்காக முக்கியமாக பொருட்களாக இருக்கும் டிவி, மொபைல், கேம்ஸ், லேப்டாப்ஸ் இது போன்று பல பொருட்கள் இந்த நவீன காலகட்டத்தில் வந்துள்ளது. ஏன் இன்று ஒரு ஒரு சிறுவனுக்கு கூட அவனுக்குனு வீட்டில் தனியாக ஒரு செல்போன் உள்ளது. வீட்டில் இன்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கும் தனித்தனியாக செல்போன் வைத்திருக்கிறார்கள் அந்த அளவிற்கு டெக்னாலஜியில் முன்னேறி இருக்குமா அல்லது டெக்னாலஜிக்கு அடிமையாகி இருக்குமா என்று தெரியாத அளவிற்கு நாம் அதிலேயே மூழ்கி போய் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவது கூட இல்லை.

-விளம்பரம்-

எங்கள் 80ஸ் 90ஸ் காலகட்டங்களில் எல்லாம் வீடுகளில் ஒரு செல்போன் இருப்பது கூட அரிதான ஒரு விஷயம் அப்படியே எங்களது வீட்டில் ஒரு செல்போன் இருந்து விட்டால் கூட அதைத் தொட்டுப் பார்ப்பது என்பதே ஓர் கூட அரிய விஷயம் அந்த அளவிற்கு வீட்டில் உள்ள பெற்றவர்கள், பெரியவர்கள் அதை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது ஒரே நேரங்களில் வெவ்வேறு டிவி புரோகிராம் பார்க்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஒருவர் டிவியில் பார்க்கிறார் ஒருவர் போனில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படியும் பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் நினைத்த நேரத்திற்கு பழைய புரோகங்களையும் புது புரோகிராம் களையும் பார்க்கும் வசதிகள் எல்லாம் வந்து விட்டது. ஆனால் எங்கள் காலகட்டங்களில் வீட்டுக்கு ஒரு டிவி இருப்பது அரிதான விஷயம் சொல்ல போனால் ஒரு தெருவிற்கு ஒருவர் வீடுகளில் டிவி இருப்பதை அறியது வீடு வீடாக சென்று டிவி பார்த்த அனுபவங்கள் எல்லாம் எங்களிடம் நிறைய உள்ளது.

அதிலும் அந்த காலகட்டங்களில் வரும் விளம்பர படங்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் அதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் கூட இப்படி எல்லாம் விளம்பரம் வந்ததா என்று எங்கள் மணம் எங்களை அறியாமல் அவற்றை நினைக்கும் போது புன்னகைக்கிறது. அந்த அளவிற்கு டிவி பார்ப்பதற்கு நாயாக, பேயாக திரிந்த கால கட்டங்கள் அது.அதுலயும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இன்னும் சில விளம்பரங்கள் மனதில் அப்படியே நீங்க நினைவுகளாக ஆழமாய் பதிந்து விட்டனர்.

-விளம்பரம்-

அதிலும் இங்கிலீஷ் மாரி, பார்லேஜி பிஸ்கட், பேட்மேன் பிஸ்கட் இதுபோன்று பிஸ்கட் விளம்பரங்களை அந்த பிஸ்கட்டை வாங்கி சாப்பிட சொல்லி விளம்பரம் படுத்தும் காமெடிகள் இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. லைபாய் சோப் வாங்குவதற்காக லைபாய் இருக்கும் இடம் ஆரோக்கியம் இருக்கும் என சோப்பு வாங்குவதற்காக வரும் விளம்பரம் படங்கள் இன்றும் மனதில் இருக்கின்றது. அதில் குறிப்பாக வாஷிங் பவுடர் நிர்மலா இந்த விளம்பரத்தில் வரும் பெண் பாடும் பாடலுக்கு நாங்கள் எல்லாம் அப்பொழுது அடிமையாய் இருந்த தருணங்கள் அதெல்லாம்.

குறிப்பாக சண்ட்ராப் ஆயில் விளம்பரத்தில் அம்மா சுட்டு வச்ச மெகா சைஸ் குலோப் ஜாமுன் விளம்பரங்கள் மற்றும் பூரிகளுக்கு நடுவில் ஒரு பையன் திரியும் ஒரு விளம்பரம் அது மட்டுமா ஜண்டு பாம் விற்பதற்கு ஒரு விளம்பரம் வருமே ஜண்டு பாம் ஜண்டு பாம் வலிகளை நீக்கும் ஜண்டுபாம் இந்த பாடல்களை அப்போதே கேட்டு அதிகம். கிரிக்கெட்டில் முழுவதும்மாக மூழ்கிபோய் கிரிக்கெட் பைத்தியமாக இருந்த போது சச்சினும், கப்பில் தேவும் பூஸ்ட் விற்பனைக்காக சொல்லும் ரகசியங்களை நம்பி வீட்டில் அடம்பிடித்திருக்கோம்.

அப்படி பட்ட விளம்பரங்கள்.விக்டர் டர்மரிக் ஆயுர்வேத கிரீம்க்கு ஒரு விளம்பரம் வரும் அந்த விளம்பரத்தை இப்போது நினைத்து பார்த்தாலும் மனம் புன்னகைக்குது அந்த அளவிற்கு மனதில் பதிந்த விளம்பரங்கள்.

அது மட்டுமா இன்னும் இருக்கு சாகசம் பண்ணும் அஞ்சாத நிருபர் வீரபத்திரன் , பஜாஜ் ஸ்கூட்டர் வாங்க சொல்லி கிரிஞ்சாக வரும் விளம்பரங்கள், நம்ம ஊரு வண்டினு டிவிஎஸ் 50, இப்போது எல்லாம் இந்த வண்டியை பார்க்க முடியவில்லை. இந்த வண்டுயை ஓரு முறையாவது ஒட்டி விட வேண்டும் என்ற கனவுகளுடன் என்னை போல் பலர். ‘ i am காம்ப்ளான் கேர்ள்’னு பொண்ணு சொல்ல ‘i am காம்ப்ளான் பாய்’னு சொல்வான் பையன் இந்த விளபரத்தை பார்த்து விட்டு நாங்களும் காம்ப்ளான் வாங்கி தர சொல்லி கேட்டு கொஞ்ச நஞ்சம் அடியா வாங்கினோம். இது போல் பல விளம்பரங்கள் நீங்கா நினைவுகளுடன் இன்னும் என் ஆழ் மனதில் ஒரு ஒரமாய் உறங்கி கொண்டு இருக்கிறது.

Advertisement