பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய நபர் இவர் தான்.! ரசிகர்கள் ஷாக்.!

0
34835
kavin and losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
bigg-boss

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்றுவந்தது. மேலும், இந்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் முகென் அதிக புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : சைக்கிள் டாஸ்கில் கவின் தோற்றதும் தர்ஷன் மற்றும் ஷெரினின் ரியாக்ஷனை நோட் பன்னீங்களா.!

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். இருப்பினும் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் கவினுக்கும் வழக்கம் போல அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது.

சேரன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய மூவரில் ஷெரின் மற்றும் லாஸ்லியாவிற்கு குறைவான வாக்குகள் பதிவாகிவந்தன . பல்வேறு இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஒட்டிங்கில் கூட லாஸ்லியாவிற்கு தான் குறைவான வாக்குகள் விழுந்துவந்தன.

-விளம்பரம்-

ஷெரின் அல்லது லாஸ்லியா வெளியேறுவார்கள் என்ற நிலையில் சேரன் வெளியேற்றப்பட்டுள்ளார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement