நகையை பார்த்ததும் ஆசை.. நடிகையை போலீசிடம் போட்டு கொடுத்த லலிதா திருடன்..

0
81791
lalitha
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல லலிதா ஜூவல்லரி நகை கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திருச்சியில் உள்ள பிரபல நகை கடையான லலிதா ஜூவல்லரி நகை கடையில் சில வாரங்களுக்கு முன் சுவரில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த கொள்ளை சமபவத்தில் ஈடுபட்ட கும்பலின் மிகவும் சாதுரியமான திருட்டு வேலை போலீசுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தது. இதனை தொடர்ந்து கொள்ளையடித்த நகை சம்பந்தமாக திருவாரூரில் மணிகண்டன் என்பவர் மாட்டிக்கொண்டார். ஆனால், அவருடன் வந்த சுரேஷ் என்பவர் மட்டும் தப்பி ஓடினார்.

-விளம்பரம்-

மேலும், மணிகண்டனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளை தொழிலிலேயே பிரபலமான திருவாரூர் முருகனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய சுரேஷ் திருவண்ணாமலை கோர்ட்டிலும், திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். இந்நிலையில் நகை கொள்ளை வழக்கில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசனை போலீசார் கைது செய்தார்கள்.மேலும், அவனிடம் 6 கிலோ 100 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தார்கள். இதனைத்தொடர்ந்து இந்த நகை கொள்ளை வழக்கில் இதுவரை மொத்தம் 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டன என்றும் போலீசார் அறிவித்துள்ளது.

- Advertisement -

பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ள கொள்ளைக்காரன் முருகன் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் அவர் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் இருந்து தனக்கு வந்த பங்கில் சிலவற்றை சினிமா துறையில் பயன்படுத்தி வந்துள்ளதாகவும், அதிலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ,முருகன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் கூறுவதால் போலீசார் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, தமிழ் சினிமாவில் பிரபல இளம் வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் போலீசார் சமீபத்தில் நடத்திய விசாரணையில் முருகனுக்கு, பிரபல நடிகைகளுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளது. இந்த விசாரணையில் முருகன் கொள்ளையடித்த பணம் மற்றும் நகை கடையை வைத்துக்கொண்டு சினிமா தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதனால் தெலுங்கு சினிமாவில் உள்ள ஒருசிலரை முருகன் சந்தித்துள்ளார். மேலும், அவர்களுக்கு நிறைய பணம் தருவதாக கூறி சுரேஷ் நடிகராக நடிக்க வைக்க திட்டமும் தீட்டியுள்ளார். ஆரம்பத்தில் ஆத்மா என்ற படத்தினை முருகன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அதன்பின்னர் அந்த படத்தினை கைவிட்டுள்ளனர். அந்த படம் கைவிடப்பட்டதும் மான்ஸா என்ற பெயரில் மற்றும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் முருகன்.

-விளம்பரம்-
Image result for lalitha jewellery theft

அந்தப்படத்தில் ஒரு நடிகையை 50 லட்சம் ரூபாய் கொடுத்து கமிட் செய்துள்ளனர், மேலும், அந்த நடிகைக்கு ஆறு லட்ச ரூபாயை முன்பணமாக அளித்துள்ளனர். ஆனால், அவர் சொன்னது போல 50 லட்ச ரூபாயை தர முடியாததால் அந்த நடிகை முருகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் தற்போதுவரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற சில காலங்கள் கழித்து முருகன் மற்றும் சுரேஷ் இருவரும் வேறு ஒரு படத்தை எடுப்பதற்காக ஐதராபாத்தில் மற்றும் ஒரு நடிகையை சந்தித்துள்ளார்கள். ஆனால், அந்த நடிகையை சந்தித்தபோது அவர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். அந்த சமயத்தில் முருகன் மற்றும் சுரேஷ் இருவரும் தங்களிடமிருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காண்பித்து தங்களுக்கு சொந்தமாக நகைகளை இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். அந்த நகைகளை கண்டு ஆசை கொண்ட அந்த நடிகையை முருகன் மற்றும் சுரேஷ் இருவருடனும் நெருக்கமாக பழக தொடங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement