டெல்லியில் இருந்து வந்த அழைப்பு, பாதயாத்திரையை பாதியில் நிறுத்தி அண்ணாமலை டெல்லி செல்ல திட்டம்? – காரணம் என்ன?   

0
1159
- Advertisement -

டெல்லியின் தலைமையின் அழைப்பால் பாதயாத்திரையை ரத்து செய்து டெல்லிக்கு புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.இதற்க்கான காரணம் அதிமுக – பாஜக தலைவர்களுக்கு இடையேயான வார்த்தை போர் தான் என்றும் சில தகவல்கள் வெளியின. ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் நேற்று எட்டாவது நாளாக மதுரையில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி .வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

பாதயாத்திரை ரத்து?

பாதயாதிரையின் ஒரு பகுதியாக இன்று மதுரையில் பாஜக சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்ற இருந்தது. இதனிடையில் நேற்று தீடிரென தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு சென்றகதாக தகவல்கள் வெளியாயின. இதற்க்கான காரணம் அதிமுக பாஜக தலைவர்களுக்கு இடையேயான வார்த்தை போர் உச்சத்தை தொட்டது  தான் எனவும் தகவல்கள் வெளியாயின. இதனிடையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக நேர்மையாக உட்கட்சி தேர்தலை நடத்தினால் கனிமொழி தான் அக்கட்சியின் தலைவராக இருந்து இருப்பார்.

-விளம்பரம்-

இந்த தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா சாவா தேர்தல் இல்லை திமுகவுக்கு தான் இது வாழ்வா சாவா தேர்தல் என்றும் அவர் கூறினார். திமுக இந்த தேர்தலில் தோற்றல் திமுக தலைமையில் மாற்றம் ஏற்படும் என்றும் அண்ணாமலை கூறினார். ராகுல் காந்தி பாராளுமன்றத்திற்க்கு வந்தால் அது பாஜகவுக்கு தான் அதிக இடங்களை பெற்று தரும் என்று அண்ணாமலை கூறினார்.         

Advertisement