“ராட்சசன் ” படத்தில் நடிக்கவிருந்த டேனியல்..! பின்னர் ‘நோ’ சொன்னதற்காக காரணம்?

0
681

தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில சிறந்த வில்லன் நடிகர்களில் டேனியல் பாலாஜியும் ஒருவர் “வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன்” போன்ற பல படங்களில் வில்லன் நடிகராக கலக்கியுள்ளார் டேனியல்.

Denial

- Advertisement -

தற்போது ‘வடசென்னை’ படத்திலும் தனது சிறப்பான நடிப்பால் அசத்தியுள்ளார். அதே போல சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படத்தில் வரும் ஸ்கூல் வாத்தியார் கதாபாத்திரத்திலும் இவர் தான் நடிப்பதாக இருந்தாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டேனியல் “ராட்சசன்” படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் சினிமாவில் எனக்கு அந்த கேரக்டரில் நடிக்கிறதுக்கு எந்த தயக்கமும் இல்லை எனக்கு வேணாம்னு தோணுன சில நல்ல ஸ்கிரிப்ட்களில் நடிக்காமலும் இருந்திருக்கேன். ‘ராட்சசன்’ படத்தில் கணக்கு வாத்தியார் கேரக்டரில் நடிக்க கேட்டிருந்தாங்க. கேரக்டரா அது படத்துக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர்.

-விளம்பரம்-

ஆனால், அந்த கேரக்டர் பள்ளி மாணவிகள்கிட்ட தப்பா நடந்துக்கிற மாதிரி இருக்கும். இந்த கேரக்டரை நான் நடிச்சி, அதோட அவுட்புட் ரியலா இருந்துச்சுன்னா, எங்க வீட்டுல இருக்கிற பெண்களும் அவங்களோட மகள்களும் என்னை எப்படி பார்ப்பாங்கனு எனக்குத் தெரியலை.

அதுனால, ரொம்ப ரியலா இருக்கிற இந்த கேரக்டர் எனக்கு வேணாம்னு டைரக்டர் ராம்குமார்கிட்ட சொன்னேன். இப்படி எனக்கு தயக்கமா இருக்கிற சில படங்களை நான் தவிர்த்தும் இருக்கேன் என்று கூறியுள்ளார் நடிகர் டேனியல்.

Advertisement