இரண்டே மாதத்தில் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ள நடிகர் ஜெயராம்.!

0
3361
Jayram
- Advertisement -

மலையாள சினிமாவில் நடித்த பல நடிகர்கள் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளனர். அந்த வகையில் நடிகர் ஜெயராமும் ஒருவர். தமிழில் 199 ஆம் ஆண்டு வெளியான கோகுலம் படத்தில் அறிமுகமான ஜெயராம் அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for jayaram

இவரது அடையாளமே இவரது பப்லியான தோற்றம் தான். ஆனால், சமீபத்தில் இவரது தோற்றத்தை கண்டு பலரும் வியப்படைந்துள்ளனர். அதற்க்கு முக்கிய காரணமே தற்போது ஜெயராம் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளளார். மலையாள நடிகர் ஜெயராம், தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார். த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம் ஜோடியாக, தபு நடிக்கிறார். இந்தப் படத்துக்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார் ஜெயராம் .

இதையும் பாருங்க : கவின் லாஸ்லியா இவ்ளோ நெறுக்கிட்டாங்களா.! இத நேத்து கவனிசீங்களா.! 

- Advertisement -

தனது உடல் எடை குறைத்தது பற்றி பேசியுள்ள அவர், எனக்கு வந்த கேரக்டர்கள் எல்லாம், உடல் எடை அதிகரிப்பது போலவே வந்தன. கடந்த வருடம் உருவான இந்த படத்துக் காக உடல் எடையை அதிகரித்தேன். அடுத்து நடித்த மார்கோனி மத்தாய் படத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியாக நடித் தேன். இதற்கு உடல் எடை அதிகமாக வேண்டும் என்று இயக்குனர் சொன்னார்.

jayaram-loses-12-kg-in-60-days

அதனால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி விட்டேன். அடுத்த படத்தில் ஐஏஎஸ் அதிகாரி கேரக்டர். இதற்கு டி.என்.சேஷனை மனதில் நினைத்ததால் உடன் எடையை அதிகரித்தேன். இதனால் உடல் எடை கணிசமாக உயர்ந்துவிட்டது. தற்போது அல்லு அர்ஜுன் படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளேன்.

-விளம்பரம்-

அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக உடல் எடையை குறைக்கச் சொன்னார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்து 2 மாதத்தில் 12 கிலோ குறைத்திருக்கிறேன். இது எனக்கு 2 வது தெலுங்கு படம். இதில் என் கேரக்டர் பற்றி சொல்ல மாட்டேன். எனக்கு ஜோடியாக தபு நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

Advertisement