நல்லது சொல்ல போய் தாக்கப்பட்ட ரியாஸ் கான். போலீஸீல் புகார். என்ன நடந்தது ?

0
1379
riyaz khan
- Advertisement -

உலகம் முழுவதும் போரில் விட அதிகமாக இந்த கொரோனா வைரஸினால் மக்கள் இறக்கின்றனர். உலக மக்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவினால் 5734 பேர் பாதிக்கப்பட்டும், 166 பேர் பலியாகியும் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

-விளம்பரம்-
Uma Riyaz Khan - Family love ❤️❤️ | Facebook
தனது குடும்பத்தினருடன் ரியாஸ் கான்

இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்து உள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

இதையும் பாருங்க : வீட்டில் முக கவசம் செய்வது எப்படி. பிக் பாஸ் நடிகரின் மகள் வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

இதான் ஒரே பாதுகாப்பான வழி வீட்டில் தனித்து இருப்பது தான். மேலும், அரசாங்கமும் விழித்திரு, விலகி இரு, தனித்து இரு என்று பொது மக்களுக்கு அறிவுறுத்து வருகிறது. அதே போல பல்வேறு பிரபலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், அட்வைஸ் செய்ய போய் வம்பில் சிக்கியுள்ளார் பிரபல நடிகரான ரியாஸ் கான். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரியாஸ் கான்.

Riyaz Khan Biography, Age, Height, Body, Bio data & Untold Stories ...

-விளம்பரம்-

தமிழில் பல படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து உள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ‘பாடிபில்டர்’ ஆவார். இதனால் உடற் பயிற்சி செய்வதால் அதிக கவனம் செலுத்தும் ரியாஸ் கான், சென்னை பனையூர் ஆதித்யாராம் நகரில் உள்ள தனது குடியிருப்பு பகுதியில் நேற்று காலை நடைபயிற்சி சென்று கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : தன்னுடன் நடித்த இந்த நடிகரை தான் சுனைனா திருமணம் செய்துகொள்ள போகிறாரா?

அப்போது அங்கு சிலர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்ததை கண்ட ரியாஸ்கான் கோருவதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கும் நிலையில் இப்படி கூட்டமாக நின்று பேசலாமா என்று கேட்டிருக்கிறார். அதன் பின்னர் அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் ரியாஸ்கானிடம் வாக்குவாதம் செய்ய அந்த கும்பலில் இருந்த ஒருவர் நடிகர் ரியாஸ் கானை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் ரியாஸ்கான் கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement