3 ரோஜா பூ தான் மாலை, சொற்ப கூட்டம். ஊரடங்கால் பிரபல நடிகரின் இறுதி அஞ்சலியில் பரிதாபம்.

0
11951
sasikalinga
- Advertisement -

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளார். இந்தியாவில் பல்வேறு துயர சம்பவங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. யாரும் வெளியில் செல்லக்கூடாது, கூட்டம் கூட கூடாது என்பதனால் இறந்தவர்களின் கடைசி ஊர்வலத்தில் கூட கலந்துகொள்ள முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் நடிகர் சேது அவர்கள் மாரடைப்பால் இறந்தார்.

-விளம்பரம்-
மோகன்லால் படத்தில் சசி கலிங்கா

- Advertisement -

இவரது இறுதி சடங்கிற்கு கூட யாராலயும் செல்ல முடியவில்லை. இதனால் பல பிரபலங்கள் தங்களுடைய வேதனையை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மலையாள திரை உலகில் மிகப் பிரபலமான நடிகர் சசி கலிங்கா இறந்து உள்ளார். தற்போது அவருக்கு 59 வயது தான் ஆகிறது. மலையாள சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் சசி கலிங்கா.

இதையும் பாருங்க : நல்லது சொல்ல போய் தாக்கப்பட்ட ரியாஸ் கான். போலீஸீல் புகார். என்ன நடந்தது ?

இவர் நாடக நடிகராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி சினிமாவில் மோகன்லால், மம்முட்டி, சீனிவாசன் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும், கடந்த சில தினங்களாகவே இவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினையால் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதனை அடுத்து இவரது சொந்த ஊரான கோழிகோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இவருடைய மரணச் செய்தியை அறிந்தும் லாக் டவுன் சூழ்நிலையால் யாரும் வெளியே வராமல் பயந்து வீட்டுக்குள் இருக்கிறார்கள். பல படங்களில் நடித்த சசி கலிங்காவின் இறுதி சடங்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஆட்கள் இருந்தனர். கொரோனா காரணமாக யாரும் பயந்து கொண்டு வரவே இல்லை.

இந்த கொரோனா பிரச்சனை மட்டும் இல்லாமலிருந்தால் ஒட்டுமொத்த திரையுலகமும் சசி கலிங்கா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருப்பார்கள். இறுதிச்சடங்கில் மரியாதை செலுத்த மாலை வாங்க கூட எந்த கடையும் இல்லை. இதனால் அவரது வீட்டின் முற்றத்தில் இருந்த மூன்று ரோஜாவை பறித்து அதை நாரில் மாலை கோத்து அவருடைய உடலிற்கு வைத்தார்கள்.

சசி கலிங்கா

பிரபலமான நடிகருக்கு இந்த துரதிஷ்டமான நிலையா என்று வேதனை கொள்ளும் அளவிற்கு இறுதி அஞ்சலி இருந்தது. இவரின் மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ், மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இதே நிலைமை தான். இவருடைய இயற்பெயர் வி.சந்திரகுமார். ஆதமிண்டே மகன் அபு, இந்தியன் ருப்பீ, ஆமென் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் சசி கலிங்கா.

இதையும் பாருங்க : தன்னுடன் நடித்த இந்த நடிகரை தான் சுனைனா திருமணம் செய்துகொள்ள போகிறாரா?

இவர் 25 வருடங்களாக நாடங்களில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட இவர் 500 நாடகங்களில் நடித்துள்ளார். பின் இவர் 1988ல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் என கூறப்படுகிறது. இவர் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள இசை அமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement