விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து தற்போது ஒரு தயாரிப்பாளராக அவரதராமெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கல்லூரி நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘கனா’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அவரது தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. மேலும், இந்த படத்தில் தனது மகள் ஆராதனாவை பாடகியாக அறிமுகம் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள ‘ என்ற பாடலை தனது மழலை மொழயில் தனது தந்தையுடன் சேர்ந்து அற்புதமாக பாடியுள்ளார் ஆராதனா.
சமீபத்தில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் சிவகார்திகேயன் மற்றும் ஆராதனா இருவரும் பாட தயாராகும் முன்னதாக, சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவிடம் ‘என்னுடைய லிரிக்ஸ் நீ பாடக் கூடாது… உன்னிடைய லிரிக்ஸ்சை நான் பாட மாட்டேன்’ செல்லமாக ஒரு டீல் செய்துள்ளார். அதற்கு ஆராதனவும் சரி என்று ஓகே சொல்லி இருக்கிறார். இதோ அந்த வீடியோ பதிவு.