அதிமுக மாநாடு: சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யும் தலைவர்கள்.

0
1133
- Advertisement -

மதுரையில் அதிமுக நடத்துள்ள பிரமாண்ட மாநாட்டிற்கு கலந்து கொள்ளவிருக்கும் அதிமுக தொண்டர்களுக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளதாக  கூறும் அதிமுக தலைவர்கள். அதிமுகவின் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு இருப்பதாக அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர். இந்த மாநாட்டின் மூலம் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு தக்க பதிலடியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

பலம் காட்டும் EPS – OPS:

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்  மாவட்டங்களை மையமாக வைத்து நடத்தப்படும் மாநாட்டின் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் யாருடைய பக்கம் நிற்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும் எனவும் அரசியல் தலைவர்கள் தெறிக்கின்றன. மதுரையில் நடத்தபடும் மாநாட்டிக்காக அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர்.

- Advertisement -

மற்றொரு பக்கம் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் தொண்டர்கள் தான் பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்ள கொங்கு மண்டலங்களில் அதாவது எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி அதற்க்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரட்டை குழல் துப்பாக்கிகள் என வர்ணிக்கப்பட்ட ஒ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களின் பலத்தை காட்டுவதற்காக தனி தனி மாநாட்டினை ஏற்பாடு செய்து வருகின்றன.

-விளம்பரம்-

எடப்பாடி பழனிச்சாமி நடத்த உள்ள மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுகவின் தலைவர்கள் டி. ஜெயகுமார், பாலகங்கா, அதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் பிரமாண்ட மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வருகின்றன. அதிமுக தொண்டர்கள் தங்குவதற்கான அறைகள், உணவுகள் ஏற்பாடு செய்ய பட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஒருங்கிணைத்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அதிமுக மாநாட்டில் திரளான தொண்டைகளை கலந்துகொள்ள வைப்பது கூறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அனைத்து மாவட்ட்டங்களில் இருந்தும் தொண்டர்களை வரவைத்து எடப்பாடி பழனிசாமியின் பலத்தை காட்டவேண்டும் என்றும் ஆலோசனை நடத்தி வருகினர். தொண்டர்களை வரவைப்பதர்க்கான கார், வேன்,பேருந்துகளை முன்பதிவு செய்து வருகின்றன எனவும் மேலும் 2 சிறப்பு ரயில்களை மத்திய அரசிடம் கேட்டு இருப்பதாகவும் வரும் அனைத்து தொண்டர்களுக்கும் 3 வேலையும் உணவு வழங்கப்படும் என்றும் அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர்.              

Advertisement