இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இதற்கு பதில் சொல்லுங்க , நான் கட்சியவே களைச்சிடுறேன் – சீமான் ஆதங்கம்.

0
1704
- Advertisement -

சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளர் சீமான் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்களை தரக்குறைவாக பேசியது போன்ற விடியோக்கள் இணையத்தில் பரவி வந்தது. சீமானின் பேச்சுக்களை பொறுத்த வரைக்கும் அது மக்களிடம் பெரிய வரவேற்ப்பை பெரும் இருப்பினும் அவரின் சில கருத்துகள் சில நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தற்போது தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கும் கட்சியாக இருக்கிறது. ஆனால் தற்போது சீமான் பேசிய பேச்சுக்களானது அக்கட்சியின் தொண்டர்களிடம் இடமே அதிருப்தியை ஏற்படுத்தியது.  

-விளம்பரம்-

சீமான் கூறியது:

மணிப்பூரில் நடைபெற்ற சம்பவங்களை கண்டித்து திருவள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 30 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களை பற்றி அவதுறாக பேசிய பேச்சுக்கள் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சீமான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிரனரும் பல கண்டனகளை தெரிவித்து வருகின்றனர். அக்கூட்டத்தில் பேசிய சீமான் ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மணிப்பூர் மக்களை பற்றி பேசி நமக்கு ஒரு லாபமும் இல்லை எனவும் அங்குள்ள கிறித்துவர்கள் ஓட்டுபோட போவதில்லை எனவும் இங்கு உள்ள கிறித்துவர்களும் நமக்கு ஒட்டு போட போவதில்லை என்றும் அக்கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.

- Advertisement -

மேலும் கூறிய அவர் நாம் தான் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் தேவனின் குழந்தைகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அவர்கள் சாத்தனின் குழந்தைகளாக மாறி பல வருடங்கள் ஆகிறது என்றும் அவர் கூறினார். மேலும் கூறிய அவர் “இந்த நாட்டில் அனைத்து அநிதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பு கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தான்” எனவும் அவர் கூறினார். மேலும் கூறிய “தொடர்ச்சியாக 18% விழுக்காடு ஓட்டு வைத்திருக்கும் பல ஆண்டுகளாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டு போட்டு நாட்டை தெருவில் விட்டது இவர்கள் தான். நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு காரணமே இவர்கள் தான் இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொள்வது இவர்கள்தான் பாவத்தையே செய்கிறார்கள்?”. என்றும் அவர் கூறினார்.

சீமானுக்கு வலுக்கும் கண்டனகள்:         

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லாவும் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார். “இவ்வாறு வகையான பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்க தக்கது” எனவும் தன் கட்சிக்கு வாக்கு அளிக்கவில்லை என்றால் அவர்களை சாத்தனின் குழந்தைகள் என்று இவ்வாறு பேசலமா? இது அநாகரிகமான பேச்சு, அருவருப்பானது என்றும் அவரது கண்டனகளை தெரிவித்துள்ளார். சீமான் முஸ்லீம்களையும் கிறித்துவர்களையும் தனது இலக்காக வைத்துள்ளார். இவ்வாறு பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.    

-விளம்பரம்-

சீமானின் விளக்கம்:

திமுகவும் காங்கிரஸுற்க்கும் 18% வாக்குகளை செலுத்து கின்றனர் இவர்களுக்கு மற்றும் எப்படி வரும் என்றும் ? என்றும் அவர் கூறினார். திமுக சொன்ன வாக்குறிதிகளை நிறைவேற்றினார்களா ? எதிர்கட்சியாக இருந்த போது சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை விடுதலை செய்யவில்லை என்றும் அவர் கூறினார். “கிறித்துவ மக்களுக்கு திமுக செய்த ஒரு நன்மையை சொல்லுங்கள் நான் எனது கட்சியை கலைத்து விடுகிறேன்” என்றும் அவர் கூறினார்.     

Advertisement