ரஹ்மானின் பாடலால் வங்காளத்தில் வெடித்த சர்ச்சை – பின்னணி இதுதான்.

0
477
- Advertisement -

இந்தியில் வெளியான ஏ ஆர் ரகுமானின் பாடலில் கிளம்பி இருக்கும் சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகியிருக்கும் படம் பிப்பா. இந்த படத்தில் மிருணாள் தாக்குர், இஷான் கட்டர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அமேசான் பிரைமில் கடந்த பத்தாம் தேதி ஹிந்தியில் வெளியாகியிருந்தது. இந்த படம் 1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் பாடல் சர்ச்சை:

இதில் பிரபல வங்க மொழி எழுச்சி கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் ‘கரார் ஓய் லூஹோ கோபட்’ என்ற தொடங்கும் பாடல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதை தற்போது இருக்கும் காலத்துக்கு ஏற்ப ஏ ஆர் ரகுமான் மாற்றம் செய்திருந்தார். ஆனால், இதற்கு நஸ்ருல் இஸ்லாம் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் தாளம் மற்றும் ட்யூனை மாற்றி பாடலை உருவாக்கி இருக்கும் விதம் தங்களுக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

நஸ்ருலின் பேத்தி அளித்த பேட்டி:

இதனை அடுத்து அமெரிக்காவில் இருந்து நஸ்ருலின் பேத்தி அனிந்திதா காஸி கூறி இருப்பது, பாடலை இப்படி மாற்றி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக படத்தில் இருந்தும் சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கபூர் ஃபிலிம்ஸ், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். முறையான அனுமதி பெற்று அந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறோம்.

-விளம்பரம்-

மன்னிப்பு கேட்ட தயாரிப்பு நிறுவனம்:

வங்கதேச விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சுதந்திரம், அமைதி மற்றும் நீதிக்கான அவர்கள் போராட்டத்தின் உணர்வுகளை மனதில் கொண்டும் அந்தப் பாடல் சேர்க்கப்பட்டது. பாடலை மாற்றியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார்கள். இப்படி தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டும் நஸ்ருல் இஸ்லாமின் பேரனும் பேத்தியும் ஏற்றுக் கொள்ளவில்லை மறுத்து விட்டார்கள்.

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

தற்போது ஏ ஆர் ரகுமான் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் நடந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement