நிறம் குறித்து அசோக் செல்வனின் கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அசோக்செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமணம் இனிதே நடைபெற்ற நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமான ஒன்றுதான். பாக்யராஜ்-பூர்ணிமா, அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா, சினேகா- பிரசன்னா, சமீபத்தில் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன். இவர்கள் வரிசையில் தற்போது அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனும் செப் 13 அன்று இணைந்தார்கள்.
கோலிவுட் முழுவதும் இவர்களுடைய காதல் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் கதாநாயகனாக மாறினார். அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் ஓ மை கடவுளே.
அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம்:
அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் பா ரஞ்சித் தான் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வருகிற செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள தகவல்கள் வெளியானது. திருநெல்வேலியில் உள்ள சேது அம்மன் பண்ணையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை இவர்களது திருமணம் நடைபெறதாக தகவல் வெளியானது.
அசோக் செல்வன் பதிவு:
அசோக்செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து சிலர் மோசமான கமெண்ட்டுகளை அவரது பதிவில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனது மனைவியை உருவ கேலி செய்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அசோக் பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னால் பேசிய விடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது அதில் அவர் கூறுகையில் ”வெள்ளையாக இருந்தால் அழகு கருப்பாக இருந்தால் அழகு இல்லை என்பது கிடையாது.
வெள்ளை நிறம் தான் அழகு என்று நினைத்து கொண்டிருக்கின்றார்கள் அது வெறும் நிறம் மட்டுமே இது மிகவும் தவறான பார்வை என்று அது சில அழகு சாதன பொருட்களை விற்பதற்காக சிலர் கூறிய பொய் அவர் கூறி இருந்தார். மேலும் அவர் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய திருமண புகைப்படங்களை பதிவிட்டு அது இந்த உலகத்தில் மிகவும் அழகான பெண் கீர்த்தி கொண்டேன் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவு ஆனது தற்போது வைரலாகி வருகிறது.