விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவருக்கும் விக்ரமனுக்கும் தான் அடிக்கடி சண்டை வந்துகொண்டு இருந்தது. அதே போல பிக் பாஸ் முடிந்த பின்னரும் சமூக வலைதளத்தில் அடிக்கடி அஸீமும் விக்ரமனும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டனர். இப்படி ஒரு நிலையில் விக்ரமன் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனை சேர்ந்த கிருபா என்பவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
அப்போது விக்ரமனுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அப்போது இந்த விவாகரம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்துவந்தார் விக்ரமன். ஆனால், பிக் பாஸ் வீட்டில் எப்போதும் விக்ரமனுடன் சண்டையிட்ட அசீம். இந்த விவகாரத்தில் ‘அசீம் ‘நண்பர் விக்ரமன் இதிலிருந்து மீண்டு வருவார். மீண்டும் எழுந்து வருவார். வா சகோ, நண்பா மீண்டு வா, மீண்டெழுந்து வா’ என்று தனது ஆதரவை தெரிவித்து இருந்தார்.
ஆனால், நாளடைவில் இந்த விஷயத்தை அப்படியே அனைவரும் மறந்துவிட்டனர். இந்த நிலையில் கிருபா மீண்டும் விக்ரமன் குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். தன்னை காதலித்து விக்ரமன் ஏமாற்றிவிட்டதாக இருவரும் வாட்சப்பில் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார். விக்ரமன் தன்னுடன் காதலில் இருந்த நேரத்தில் தனது மேனேஜர் என கூறிக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தார். அதை அவரே என்னிடம் ஒப்புக்கொண்டார். 1.5 வருடமாக இப்படி ஏமாற்றி இருக்கிறார்.
இதற்கு முன்பு 15 பேரை விக்ரமன் இப்படி காதல் என்கிற பெயரில் ஏமாற்றி இருக்கிறார். அவரை பற்றி கட்சியில் புகார் அளித்தேன், இது பற்றி விசாரணை நடந்த குழு அமைத்தார்கள். என் தரப்பில் உண்மை இருப்பதை குழுவும் ஒப்புக்கொண்டிருக்கிறது.”கட்சியின் தலைவர் மீது கூட விக்ரமன் மரியாதையுடன் பேசியது இல்லையாம். தலைவர் பற்றி மோசமாக விக்ரமன் தாக்கி பேசி இருக்கும் வாட்சப் உரையாடல்களையும் கிருபா முனுசாமி வெளியிட்டு இருக்கிறார்.
இவரின் இந்த பதிவு மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்த நிலையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும். ( என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும் ) – என்று பதிவிட்டுள்ளார். அஸீமின் இந்த பதிவு விக்ரமனை குறிப்பிடுவது போலவே இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.