CSK வீரர் உடன் காதலா? பாக்கியலட்சுமி நடிகை நேஹா கொடுத்த விளக்கம்- அதிருப்தியில் ரசிகர்கள்

0
700
- Advertisement -

சிஎஸ்கே கிரிக்கெட் வீரருடனான காதல் குறித்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேகா கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருப்பவர் நேஹா. இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர். பிறந்தது கேரளவாக இருந்தலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் இவர் சீரியலில் நுழைந்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்தார். குறிப்பாக, கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த வாணி ராணி தொடரில் வாணி மகளாக தேனு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை அடித்தவர் நேஹா. பலருமே இவரின் பெயர் தேனு என்று தான் நினைத்து கொண்டார்கள்.

- Advertisement -

நேஹா குறித்த தகவல்:

இந்த சீரியல் மூலம் நேஹாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் இவர் குறும்படத்தில் நடித்தார். இப்படி சீரியல் மட்டுமல்லாது பல்வேறு திரைப்படங்களில் கூட நேகா நடித்து இருக்கிறார். அந்த வகையில் சிபிராஜ் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஜாக்சன் துரை என்ற படத்தில் நேஹா நடித்திருந்தார். அதன் பின் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நேஹா நடித்து வருகிறார்.

நேஹா நடிக்கும் சீரியல்கள்:

குடும்பத்திற்காக பெண்கள் எப்படி எல்லாம் போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய இந்த கதை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. இதற்கு முன் நேகா அவர்கள் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடந்திருந்தார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இவர் கல்லூரி மாணவி ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதை அடுத்து இவர் சன் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி இருக்கும் லட்சுமி தொடரில் கதாநாயகி சுருதியின் தங்கை கதாபாத்திரத்தில் நேஹா நடிக்கிறார்.

-விளம்பரம்-

நேஹா பேட்டி :

இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் சிஎஸ்கே வீரரை நேகா காதலிக்கிறார் என்ற சர்ச்சை எழுந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நேகா,
சிஎஸ்கே அணிக்காக இலங்கை வீரர் பத்திரனா விளையாடுவது அனைவருக்கும் தெரியும். பொதுவாகவே நான் கிரிக்கெட் பார்ப்பது இல்லை. பக்கத்தில் யாராவது கமெண்ட்ரி சொல்லி கொடுத்தால் தான் கிரிக்கெட்டையே பார்ப்பேன். ஒருமுறை ஷூட்டிங்கில் அருகில் இருந்தவர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் போது பத்திரனா பற்றி சொன்னார்கள்.

காதல் தோல்வி குறித்து சொன்னது:

அப்போது அவர், போட்ட இன்ஸ்டா ஸ்டேட்டஸை நானும் ஷேர் செய்தேன். அந்த பதிவுக்கு பிறகு தான் நான் பத்திரனாவை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்தது. நானும் ஜாலியாக இருக்கு என்று விட்டுவிட்டேன். ஆனால், உண்மையில் பத்திரனாவை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. நானும் அவரும் காதலிக்கவில்லை. மேலும், என்னுடைய வாழ்க்கையில் ஒரு காதல் தோல்வி இருப்பது உண்மைதான். அதற்கான காரணத்தை என்னால் பேட்டியில் வெளிப்படையாக சொல்ல முடியாது. இதை பார்த்தால் என்னுடைய அம்மா உதைப்பார் என்று கண்ணீர் விட்டு நேஹா அழுதிருக்கிறார்.

Advertisement