Autism குறைபாடால் அவமானப்படுத்திய ஏர்போர்ட் ஊழியர், தேசிய அளவில் பேச வைத்த பிரித்திவிராஜ் – அவரே சொன்ன உருக்கமான கதை.

0
661
babloo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் பிரித்திவிராஜ். இவரை பெரும்பாலும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரிதிவிராஜ். இவர் சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அதோடு இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையில் மர்மதேசன், அரசி, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் சின்னத்திரை தொடர்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘என் கணவர் உயிருடன் வந்தால்’ – தன் முதல் கணவர் குறித்து பாவனி சொன்ன அதிர்ச்சி பதில் – அப்போ அமீருடன் காதல் என்னாச்சு?

பிரித்திவிராஜ் மகன்:

இவர் என்ன தான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் இவர் உண்மையான ஹீரோ தான். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறார். இவருடைய மகனின் பெயர் அகத். தன் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது எனத் தெரிய வந்தவுடன் உலகமே இடிந்து விழுந்ததாக உணர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை மகனுக்காவே தன்னுடைய மொத்த வாழ்க்கையும் அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். பப்லு மற்றும் அவரின் மனைவி இருவரும் மற்றொரு குழந்தையை பற்றி சிந்திக்காமல் தன்னுடைய ஒரே மகனையே குறையின்றி பார்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

பிரித்திவிராஜ் நடத்தும் விழிப்புணர்வு:

அதுமட்டும் இல்லாமல் இந்த மாதிரி குறைபாடு உள்ள குழந்தையை சரியாக வளர்ப்பது மட்டும் தான் கடமை என்று மற்ற அப்பாக்களை போல் யோசிக்காமல் தன் மகனைப் போல உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை செய்து வருகிறார். இதுபோன்ற குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்களை எப்படி பார்க்க வேண்டும், அவர்களின் தேவைகள், புரிதல்கள் என்ன என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகிறார் பப்லு. இவர் சினிமாவில் நடிப்பு மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கும் ஏற்படக்கூடாது என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் இந்த முயற்சிகளை குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிரித்திவிராஜ் பதிவிட்ட வீடியோ:

இந்நிலையில் தன்னுடைய மகன் குறித்து பிரித்விராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, என்னுடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உள்ளவன் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. தற்போது நான் என்னுடைய மகனை நினைத்து பெருமையாகவும், சந்தோஷமாகவும் நினைக்கிறேன். கடவுள் கொடுத்த வரமாகவே என்னுடைய மகனை பார்க்கிறேன். என்னுடைய மகனின் பாஸ்போர்ட் ரெனிவல் தேதி முடிந்து விட்டது. அதற்காக நாங்கள் ஏர்போர்ட் சென்றிருந்தோம். இதே சில வருடங்களுக்கு முன்பு ஏர்போர்ட்டில் என்னுடைய மகனை பார்த்து அங்கு இருந்தவர் பைத்தியமா? என்று கேட்டார். எனக்கும் அவருக்கும் சில வாக்குவாதம் நடைபெற்றது. என்னுடைய மகனை விமானத்தில் ஏத்த கூடாது என்று அவர் பிரச்சனையும் செய்திருந்தார்.

மகன் குறித்து பிரித்திவிராஜ் சொன்னது:

பிறகு விமானத்தில் இந்த மாதிரி குறைபாடு உள்ளவர்களை கூட்டிட்டு செல்ல பெற்றோர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தால் போதும் என்ற விதி இருக்கிறது. அதற்கு பின்பு என் மகனை அழைத்து சென்றோம். தற்போது ஏர்போர்ட்டில் பாஸ்போர்ட் ரினிவல் பண்ண சென்றபோது என் மகனிடம் அங்கு உள்ள பலரும் சாதாரண மனிதர்களை நடத்துவது போல தான் நடத்தினார்கள். பரிதாபமோ? பாவமோ படவில்லை. இதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் ஏன் சொல்கிறேன் என்றால், பலரும் என்னிடம் நீங்கள் சிம்பதிக்காக உங்கள் மகனைப் பற்றி பேசுகிறீர்களா? என்று கேட்டார்கள். நான் பணத்திற்காகவோ, வாய்ப்புக்காகவோ நான் என் மகனைப் பற்றி கிடைக்கும் வாய்ப்புகளில் பேசவில்லை. இந்த மாதிரி குறைபாடு உள்ள குழந்தைகளையும் சாதாரண மனிதர்களைப் போல நடத்துங்கள். இந்த குழந்தைகளை நினைத்து பெற்றோர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காகத்தான் நான் பேசினேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement