என்னடானு கேட்டேன், அவனுக்கு சுத்தமா ஞாபகம் இல்ல – போதை பழக்கத்தால் ரகுவரனுக்கு ஏற்பட்ட நிலை குறித்து பப்லு.

0
1602
Babloo
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் ரகுவரன். 80ஸ் காலகட்டம் தொடங்கி 2000 காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரகுவரன் அதன் பின் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொரிந்து போனது. பின்னர் இவர் தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ரகுவரன். இதனிடையே ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது.

- Advertisement -

ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். ரகுவரன் மற்றும் ரோகிணி பிரிந்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் ரகுவரன் இறந்தார்.

இப்படி ஒரு நிலையில் ரகுவரனை பற்றி நடிகர் பப்லு ப்ரித்விராஜ் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அவர் ’80’s காலக்கட்டங்களில் நானும் ரகுவரனும் சிறந்த நண்பர்கள். நானும் அவரும் jawa வண்டியை பற்றி தான் அதிகம் பேசி அடிக்கடி சண்டை போட்டு வந்தோம்.

-விளம்பரம்-

அப்போது என்னிடம் ஸ்கூட்டர் மட்டுமே தான் இருந்தது. அப்போதையே பெட்ரோல் விலை 6 ரூபாய் தான் இருந்தது. அதுக்கு பெட்ரோல் போடவே ரொம்ப கஷ்டப்பட்டு வந்தோம். என்னுடைய தோழியும் ரகுவரனின் தோழியும் சிறந்த நண்பர்கள். அவர்கள் இரண்டு பேருமே வசதியானவர்கள். அவர்கள் செல்வதென்றாலே தாஜ் மற்றும் சோழா ஓட்டல்களுக்கு தான் செல்வர்கள். அங்கு வெளியே நிற்கும் காவலாளிக்கு டிப்ஸ் கொடுக்க கூட எங்களிடம் பணம் இருக்காது.

அங்கு உணவு முடித்துவிட்டு பில் வரும் நேரத்தில் வாஷ்ரூம்க்கு சென்று விடுவோம். அதன் பின் அவர்கள் அதற்க்கு பணம் செலுத்தி விடுவார்கள். அதே போல் தான் ஒரு நாள் ரகுவரனின் வண்டியில் பெட்ரோல் காலியானது அப்போது அப்படியே பெட்ரோல் பம்பிற்கு சென்றோம். ரகுவரனின் தோழி டாங்கை புல் செய்ய சொல்லிவிட்டார். இது மாறி நடக்கும் என்று தெரிந்து இருந்தால் நானும் என் வண்டிக்கு பெட்ரோல் போடாமல் வந்து இருப்பேன் என்று நினைத்து கொண்டேன். இது போன்ற குட்டி குட்டி விஷயங்கள் எங்களுக்குள் நடை பெற்றுள்ளது.

ரொம்ப வருடங்கள் கழித்து நான் ரகுவரனை சந்தித்து இதை பற்றியெல்லாம் நியாபகம் இருக்கிறதா நம்ம இப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம் என்று சொன்னேன். அதற்க்கு அவர் திரு திருவென முழித்தார். என்ன என்று கேட்டால் அதற்க்கு அவருக்கு எல்லாமே மறந்து போய் இருக்கிறது. அவருக்கு போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் தான் அவரின் வாழ்க்கையே சிரழந்தது. மேலும் அவர் சின்ன வயதிலே உயரிழந்தர். ஆகவே யாரும் எதற்காகவும் போதை பழக்கதிற்க்கு அடிமையாக வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.                      

Advertisement