நீட் தேர்வு விலக்கு குறித்து ஒன்றிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அதை பற்றி பேச ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் ஒரு போஸ்ட் மேன் தான். நங்கள் அனுப்பியவற்றை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் அது தான் அவரின் வேலை என்று பேசினார் . சென்னையில் நடந்த திமுக மேற்கு மாவட்ட பகுதி செயலாளர் ராமலிங்கம் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொண்டு, திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார். அங்கு அவர் கூறுகையில்,
“ஆளுங்கட்சியாகவே இருக்கும் போது இந்த உண்ணாவிரதம் அறப்போராட்டம் நடத்துவது ஏன். இன்று திருமணத்தில் மனக்காலத்தில் இருக்கும் இரண்டு பேருமே மருத்துவர்கள். இவர்கள் எல்லாம் நீட் எழுதி அதில் தேர்ச்சி பெற்ற மருத்துவராக இங்கு வரவில்லை இவர்கள் படிக்கும் காலத்தில் நீட் தேர்வே கிடையாது. அதனால் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெறக்கூடிய அந்த மதிப்பெண்களை வைத்து மருத்துவ வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் இப்போது அப்படி இல்லை நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் மருத்துவராக முடியும் என்ற நிலை தற்போது வந்துள்ளது.
நீட் தேர்வை கொண்டு வந்த காலத்தில் நாங்கள் அதனை கடுமையாக எதிர்த்து உள்ளோம். மத்தியிலே பாஜக ஆட்சியில் வந்த பிறகு நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். ஆனாலும் அப்போது கூட நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட்டுக்கு எதிரான மசோதாவை கவர்னருக்கு அனுப்பி அதன் பிறகு அது டெல்லியில் ஜனாதிபதியிடம் சென்றது.
ஜனாதிபதியிடம் சென்ற அந்த மசோதாவானது அதிமுக ஆட்சியில் திரும்ப அனுப்பப்பட்டது. அதிமுக ஆட்சியில் திரும்ப அனுப்பப்பட்டதை கூட அவர்கள் வெளியில் சொல்லவில்லை. அதை அவர்கள் சட்டமன்றம் நடைபெற்றது இந்த நேரத்தில் கூட சொல்லவில்லை. ஆக அதனை நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.
ஓராண்டு காலமாக அதை சொல்லாத காரணத்தினால் அந்த மசோதா ஆனது செல்லுபடி ஆகாத நிலைக்குச் சென்று அந்த மசோதா. ஆகவே நாம் தேர்தல் நேரத்தில் சொன்னோம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனை தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றுவோம் நீட் தேர்வை எதிர்ப்போம் அதனை ரத்து செய்வதற்காக ஈடுபடுவோம் என்று சொன்னோம். பின் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வந்த பின்னர் நீட் விலக்கு மசோதாவிற்கு சட்டமன்றத்தை கூட்டினோம். அதற்கு எல்லா கட்சிகளும் ஆதரித்தது தற்போது கட்சியாக இருக்கும் அதிமுக கூட ஆதரித்தது.
இந்த மசசோதாவை முன்பு இருந்த ஆளுநரிடம் அனுப்பினோம் ஆனால் அதை ஆளுநர் ஜனாதிபதியிடம் அனுப்பவில்லை நாங்கள் அதனை போராட்டும் செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். அதன்பின் இன்று இருக்கும் ஆளுநர் அவரிடமும் அனுப்பி வைத்தோம் ஆனால் அதனை அவர் அனுப்பாமல் ராஜ்பவனில் வைத்துக் கொண்டார். போராட்டங்களை நடத்தி மீண்டும் இரண்டாவது முறை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம் அது டெல்லியில் ஜனாதிபதி இடம் உள்ளது.
இந்த மசோதா குறித்து டெல்லியில் உள்ள ஒன்றிய அரசுதான் தீர்மானம் எடுக்க வேண்டும். ஆளுநருக்கு வெறும் போஸ்ட்மேன் வேலை மட்டும்தான் நாம் அனுப்பி வைப்பது அங்கு அனுப்பி வைக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்தார் அப்போ தனியார் விலக்கப்பட்ட கேள்வி கேட்டபோது அதற்கு நீட் விளக்க முடியாது என்று அவர் பதில் அளித்தார். ஆனால் அதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதற்கு எல்லாம் சேர்த்துத்தான் இந்த தமிழ்நாட்டில் மாபெரும் உண்ணாவிரதம் அறிவித்துள்ளோம். நீட் விலக்கு வரை திராவிட முன்னேற்ற கழகம் ஓயாது முடியாது.” என்று அவர் கூறினார்.