நயன் திருமண உடை, உருவக் கேலி – மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளான விஜய் டிவி நிகழ்ச்சி.

0
207
bbjodigal
- Advertisement -

விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிபி ஜோடிகள் சீசன் 2வில் ஆர்த்தியை உருவக்கேலி செய்ததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஜோடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்து ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியார்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து கொண்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் பிக் பாஸ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து bb jodigal என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்துஇருந்தது . விஜய் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியை தான் தற்போது பிக் பாஸ் பிரபலங்களை வைத்து துவங்க இருக்கிறார்கள். இதில் போட்டியாளர்களாக முதல் சீசன் துவங்கி நான்காவது சீசன் வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் நடனமாடி வருகின்றனர்.

- Advertisement -

பிபி ஜோடி சீசன் 1 :-

ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்ற இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் ஷிவானி -சோம்சேகர், கேப்ரில்லா – ஆஜித், வனிதா -சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் – ஷாரிக், அறந்தாங்கி நிஷா – தாடி பாலாஜி, சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ், பாத்திமாபாபு – மோகன் வைத்தியா, ஜூலி – சென்றாயன் ஆகிய பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் ஷிவானி மற்றும் வனிதா தாங்களாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள். மேலும், பாத்திமா பாபு – மோகன் வைத்தியா மற்றும் ஜூலி – சென்றாயன் ஜோடி எலிமினேட் ஆகிய நிலையில் மீதமுள்ள ஜோடிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி (செப்டம்பர் 19 ) ஒளிபரப்பானது. இதில் அனிதா – ஷாரிக் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

பிபி ஜோடிகள் சீசன் 2 :-

இப்படி ஒரு நிலையில் BB ஜோடியின் இரண்டாம் சீசன் 2 விரைவில் துவங்கியது. இதில் பிரியங்கா – ராஜு ஆங்கராகவும், இசைவாணி – வேல்முருகன், ஐக்கி பெரி – தேவ், சுருதி – அபிஷேக், கணேஷ்கர் – ஆர்த்தி, பாவணி – அமீர், சிவகுமார் – சுஜா வருணி, பார்த்தசாரதி – தாமரை, ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். அதே போல டேனியல் ஜோடி இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டு இருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 வின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று இரண்டு நாட்களுக்கு முன்பே முடிந்துள்ளது. அதில் அமீர் மற்றும் பாவணி இருவரும் டைட்டில் வென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் இடத்தை சிவாஜி தேவ் – சுஜா பிடித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் உருவகேலி :-

விஜய் டிவியின் எந்த ஒரு நிகழ்ச்சி எடுத்துக் கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் நடுவர்கள், தொகுப்பாளர் இல்லாமல் கூட நடக்கும் ஆனால் விஜய் டிவியின் காமெடி நட்சத்திரங்கள் இல்லாமல் விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் தற்போது நடப்பதில்லை. அவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் விஜய் டிவி காமெடி நட்சத்திரங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் அங்கு இருப்பவர்களை உருவத்தை வைத்தும் அவர்களின் நிறத்தை வைத்து கேலிகள் செய்து அதனை காமெடி என்று செய்து கொண்டு இருப்பார்கள். இது பலருக்கும் பிடித்திருந்தாலும் சில இது போன்று ஹீயூமர் சென்ஸ் உடன் பண்ணுவதாக சென்ஸ்சை இல்லாமல் பண்ணுகிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆர்த்தி ஜோடி

உருவகேலிக்கு உள்ளான ஆர்த்தி :-

இந்நிலையில் ஆர்த்தி-கணேஷ்கர் ஜோடி நடனதின் போது ஏற்பட்ட நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளானது. ஆம் நடன நிகழ்ச்சிக்காக நயன்தாராவின் திருமண நாள் உடையான சிவப்பு நிற உடைய ஆர்த்தி அணிந்து வந்தார் ஸ்டேஜிக்கு வந்த ஆர்த்தி முகத்தில் கருப்பு நிற சாயம் பூசி இருந்ததை பார்த்த பலர் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இதிலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆர்த்தியை அவர் உருவத்தை வைத்து பலரும் கேலி செய்துள்ளனர் மற்றும் அவர் வரும்பொழுது அவர் பேசும் பொழுதும் விஜய் டிவியில் பேக்ரவுண்ட் மியூசிக் போடுபவர் யானை பிளிர்வது போன்ற சத்தத்தை போடுவார். இப்படி உருவத்தை வைத்தும் கருப்பு நிறத்தை வைத்தும் கேலி செய்ததால் பலரும் கொந்தளித்து இருந்தனர் விஜய் டிவியை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

Advertisement