நான் செத்தா அதுக்கு இவதான் காரணம் – குஷ்புவை திட்டி தீர்த்த பாரதிராஜா. என்ன காரணம் தெரியுமா ?

0
535
- Advertisement -

நான் செத்தால் அதற்கு குஷ்பு தான் காரணம் என்று இயக்குனர் பாரதிராஜா கண்டபடி திட்டி பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருக்கிறது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

பாரதிராஜா திரைப்பயணம்:

மேலும், தமிழ் சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். அதுமட்டும் இல்லாமல் இவருடைய மாணவர்களான பாக்யராஜ், பாண்டிராஜ் முதலான பல பேர் தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனர்களாக இருந்தனர். பின் தாஜ்மஹால் படத்தில் தன்னுடைய மகனை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தன் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. பாரதிராஜா இதுவரை ஆறு முறை தேசிய விருது வாங்கியிருக்கிறார்.

பாரதிராஜா நடிக்கும் படங்கள்:

80-90 காலகட்டத்தில் பல நடிகர்கள் இவர் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட மாட்டோமா? என்று ஏங்கி இருக்கிறார்கள். ஆனால், சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நயன்- விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருந்த ராக்கி படத்தில் பாரதிராஜா நடித்து இருந்தார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

குஷ்பூ அளித்த பேட்டி:

படத்தில் பாரதிராஜா வேற லெவல்ல மிரட்டியிருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் கேப்டன் மகள் படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை நடிகை குஷ்பு பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், 1993 ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படம் வெளியாகியிருந்தது. பாரதிராஜாவுக்கு பாம்பு என்றால் பயம். கேப்டன் மகள் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நான் பல் பிடிங்கிய பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாரதிராஜாவிடம் சென்று பேசினேன்.

பாரதிராஜா சொன்னது:

அப்போது திடீரென பாம்பை பார்த்தவுடன் பயந்து போன பாரதிராஜா தலை தெறிக்க ஓடுகிறார். இதனால் படப்பிடிப்பில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பாரதிராஜா, நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தாலும் இதற்கு இவள் தான் காரணம் என்று குஷ்புவை சரமாரியாக திட்டியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து தான் சமீபத்தில் நடிகை குஷ்பூ பேட்டியில் கூறியிருக்கிறார். தற்போது குஷ்புவின் இந்த பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement