போதும் நிறுத்துங்க நான் பிக் பாஸ் போல. இளசுகளின் நெஞ்சில் இடியை இறக்கிய இளம் நடிகை.

0
1822
amirtha

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

தமிழில் இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் வரும் அக்டொபர் மாதம் 4 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் பிக் பாஸில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதனை மறுத்து உள்ளார் நடிகை அமிர்தா ஐயர்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவறான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை. நன்றி என்று கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் அமிர்தா லைவ் சாட்டில் வந்த போது ரசிகர் ஒருவர் ‘நீங்க பிக் பாஸ் போவீங்களா ‘ என்று கேட்டிருந்தார் அதற்கு பதில் அளித்த அமிர்தா ‘தெரியல சஸ்பென்ஸ்ஸாவே இருக்கட்டும்’ என்று கூறியிருந்தார். இதை நம்பி தான் இளசுகள் பலரும் இவர் பிக் பாஸில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்து வந்தனர்.

-விளம்பரம்-
Advertisement