ஊரடங்கு கேப்பில் சிக்ஸ் பேக்கை வைத்த ஆரவ். வைரலாகும் புகைப்படம்.

0
25765
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர். க் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அரவ் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மேலும், “மீண்டும் வா அருகில் வா” என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : படபடிப்பிற்கு தனி விமானத்தை வாடகை எடுத்து சென்ற ஜீவா பட நடிகையின் கதை தெரியுமா?

- Advertisement -

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வரும் எவருக்கும் சினிமாவில் நல்ல ஒரு எதிர்காலம் அமைந்துவிடுவதில்லை என்பதுதான் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இதில் ஆறும் ஒன்றும் விதிவிலக்கல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் இவர் நடிப்பில் மார்க்கெட் ராஜா என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டும்தான் வெளியானது. ஆனால் அந்த படமும் சரியாக ஓடவில்லை.

https://www.instagram.com/p/B-7FLp9AdUk/?igshid=1uiodse9v8wy1

தற்போது புது முக இயக்குனர் சந்தோஷ் நரேஷ் இயக்கி வரும் ‘ராஜபீமா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ஆரவ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட பல மாதங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. அதே போல இந்த படத்தின் ஓவியாவும் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடலில் இருந்து சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : மக்களுக்கு சேவை செய்ய அரசு நடத்தும் கால் சென்டரில் பணிபுரியும் கார்த்தி பட நடிகை. யார் தெரியுமா ?

-விளம்பரம்-

தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் மற்றவர்களைப் போல ஆரவ்வும் வீட்டில்தான் இருந்து வருகிறார். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை நன்றாக பயன்படுத்தி வரும் ஆரவ் கடினமான உடற்பயிற்சிகளை செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஆரவ் #Quarantineeffect என்று குறிப்பிட்டுள்ளார்

Advertisement