தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.
இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதையும் பாருங்க : மக்களுக்கு சேவை செய்ய அரசு நடத்தும் கால் சென்டரில் பணிபுரியும் கார்த்தி பட நடிகை. யார் தெரியுமா ?
இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் ‘முகுந்தா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த பூஜா ஹெக்டே, அடுத்ததாக பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். ‘மொகெஞ்ச தாரோ’ என்ற படத்தில் ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிதிக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே.
இப்படி படிப்படியாக முன்னேறிய நடிகை பூஜா ஹெக்டேவின் கிராஃப், இப்போது அவரை ஒரு முன்னணி நடிகை அந்தஸ்தில் வைத்திருக்கிறது. அதுவும் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரண்டு திரையுலகிலும். இது பற்றி பூஜா ஹெக்டே அப்போது அளித்த பேட்டி ஒன்றில் “தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல.
இதையும் பாருங்க : இலவசமாக பெற்ற செவிலியர் சான்றிதழை பதிவிட்ட ஜூலி. அதை நீங்களும் பெறலாம் எப்படி தெரியுமா?
எனது கால்ஷீட்களை ரொம்ப ஜாக்கிரதையாக கையாண்டு வருகிறேன். 2018-ஆம் ஆண்டு நான் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்தேன். அப்போது, அக்ஷய் குமாரின் ‘ஹவுஸ்ஃபுல் 4’ என்ற ஹிந்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு உடனடியாக போக வேண்டிய சூழல் வந்தது. ஆகையால், வேறு வழியின்றி தனியார் விமானத்தை வாடகைக்கு அமர்த்தி அதில் சென்று ராஜஸ்தானில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன்” என்று பூஜா ஹெக்டே தெரிவித்தார்.
சமீபத்தில், பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது. தற்போது, பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் ‘ஜான், மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ என இரண்டு தெலுங்கு படங்களும், ‘கபி ஈத் கபி தீபாவளி’ என்ற ஹிந்தி படம் என மொத்தம் மூன்று படங்கள் வரிசையாக இருக்கிறதாம்.