பரிசுத் தொகையை விட ஆரி 105 நாளுக்கான பெற்ற சம்பளம் அதிகம். எவ்ளோ தெரியுமா ?

0
2473
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 நிறைவடைந்துஇருந்தது . இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-23.jpg

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.

- Advertisement -

இந்த சீசனில் ரமேஷின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டு இருக்கிறது. யார் யார் எத்தனை நாட்கள் இருந்தார்களோ அந்த நாட்களை கணக்கு செய்து வரி பிடித்தம் போக மீதி கையில் கிடைக்கும். இதில்  நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் விரும்பி வழங்கும் பரிசுப் பொருட்களும் தனி என்கிறார்கள்.

அந்த வகையில் முதல் பரிசை வென்ற ஆரிக்கு 50,00,000 பரிசாக வழங்கப்பட்டது. அதில் 30 சதவீதம் வரி போக 35,00,000 கிடைக்கும். மேலும், பிக் பாஸ் வீட்டில் அவர் 105 நாள் இருந்ததை கணக்கு செய்து பார்க்கையில் நாளுக்கு 85,000 என்ற வீதம் 89,25,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் வரி போக 62,47,500 ரூபாயை பெற்றுள்ளார். மொத்தத்தில் 35,00,000 பரிசுத்தொகை மற்றும் 62,27,500 ரூபாய் சம்பளம் என மொத்தம் ஆரி 97,47,500 ரூபாயை பிக் பாஸ் மூலம் பெற்றுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement