விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி நிறைவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.
அதே போல இறுதி போட்டிக்கு ஒரு சில நாள் மட்டுமே இருந்த நிலையில் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துகொன்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார். ஆரி மற்றும் பாலாஜிக்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இறுதி போட்டி என்பதால் கடந்த சீசனில் பங்குபெற்ற முகேன், கவின், ஷெரின் என்று பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள். அதே போல கவின் உள்ளே சென்று சோம் சேகரை வெளியே அழைத்து வந்த நிலையில் முகேன் ரம்யாவை அழைத்து வந்தார். அதே போல இறுதியில் ஷெரின் உள்ளே சென்று ரியோவை வெளியில் அழைத்து வந்தார்.இப்படி ஒரு நிலையில் ஷெரினின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பாலாஜியின் ரசிகர்கள் பலரும் ஷேரினை திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே நேற்று ஷெரின் உள்ளே சென்ற போது பாலாஜியை பல இடங்களில் மொக்கை செய்துவிட்டார்.
அதனாலயே பாலாஜி ரசிகர்கள் ஷேரினை திட்டித்தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஷெரின் குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாலாஜி, அன்பார்ந்த ரசிகர்களே, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவட்ரில் ஷேரினை தரக்குறைவாக பேசுவதாக கேள்விப்பட்டேன். அவர் எனக்கு நல்ல தோழி. எனவே, தயவு செய்து சமூக வலைதளத்தில் அவதூறாக எதையும் பதிவிட வேண்டாம் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஷெரின், நன்றி டா, ஒரு சிலர் நட்புரீதியான கிண்டல்களை புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.