பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் கடந்து வந்த பாதை டாஸ்கில் நேற்று அபிஷேக் சொன்ன கதை நெட்டிசன்களால் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் ருக்க முடியாது.
அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஆன்டனி பேட்டி ஒன்றில் இவர் பாடிய ‘வெயிலோடு விளையாடி’ பாடலை பலரும் வச்சி செய்தனர்.
பிக் பாஸில் கலந்துகொண்ட இரண்டாம் நாளிலேயே இவர் தன் அம்மா மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பேசி அழுதது பெரும் கேலிக்கு உள்ளானது. அவர் பேசிய பேச்சுகள் அனைத்தும் முன்னுக்கு பின்னாக தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் தான் நேற்று இவர் தான் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்.
அதில் பல பஞ்ச் வசனத்தை வைத்து சொன்னார் அபிஷேக், நான் சிறு வயதில் இருந்தே சினிமாவை பார்த்து தான் வளர்ந்தேன். அதிலும் சிறு வயதில் நான் எல்லா போட்டோவிலும் புலி போல இருப்பேன். என் அப்பா இறந்த போது எனக்கு பெரிய வருத்தம் இல்லை, ஏன்னா அவன் வாழ்க்கைய அவன் செமயா வாழ்ந்தான். சிறு வயதில் நான் அப்துல் கலாமை பார்த்தால் இதையெல்லாம் கேட்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தேன் அதை பார்த்துவிட்டு என்னுடைய தந்தை அப்துல் கலாமை சந்திக்க ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார்.
அப்துல் கலாமை சந்தித்த பின்னர் அவர் என்னிடம் பரவாயில்லை, உன்னிடம் ஏதோ இருக்கிறது என்று சொன்னார். பின்னர் ஆறு மாதம் கழித்து அவருடைய பர்சனல் செல்லில் இருந்து எனக்கு ஒரு லெட்டர் வந்தது. அதில் அபிஷேக் உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது, இப்படி ஒரு குடிமகன் இந்த நாட்டிற்கு தேவை. இதே மாதிரி நீ ஆற்றலோடு இருந்தால் நீ பெரிதாக வருவாய் என்று எனக்கு அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.
அதே போலதன் அப்பா, தன் வீட்டை அடகு வைத்து ஒரு பெரிய தொகையை அவரிடம் ட்ரைவராக வேலை செஞ்சவரிடம் கொடுத்தார். அப்படியே நாங்கள் ரோட்டுக்கு வந்துவிட்டோம். இடையில் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. நான் திருமணம் செய்துகொண்டேன். அதனால் என் அப்பாவுடன் தள்ளி இருந்தேன். அப்பா கடனை அடைக்க எல்லாத்தையும் விற்றுவிட்டேன். திருமண வாழ்க்கையும் முடிந்துவிட்டது.
பின் என் அப்பா இறந்துவிட்டார். என் அப்பாவின் இறப்பிற்கு நானே காரணமாக இருந்துவிட்டேன். அதே போல என் அப்பா இறந்துவிடுகிறேன் என்று சொன்ன 3 நாளில் அவர் இறந்துவிட்டார். என் அப்பா இறந்த அன்று என் அப்பாவின் ஆவி என் அம்மா உடம்புக்குள்ள போனதை பார்த்தேன் என்று கூறி இருந்தார். அபிஷேக்கின் இந்த கதையை கேட்டு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.