வாட்ஸ் அப்பில் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு தனது மகள் குறித்து வேதனப்பட்டுள்ள ஐசு தந்தை – பிரதீப் டெலீட் செய்த ஸ்க்ரீன் இதோ.

0
424
Pradeep
- Advertisement -

ஐசுவின் தந்தை அனுப்பிய வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டை பிரதீப் பகிர்ந்து பின்னர் நீக்கி இருக்கிறார். ஐசு வெளியேறியது நிக்ஸனுக்கு தான் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இருவரும் நட்பாக பழகி வந்தார்கள். பின் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகுவதை பார்த்து பலருமே காதலிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை எழுதி இருந்தார்.

-விளம்பரம்-

பின் ஐசு வரும்போது நிக்ஸன் ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸு, நிக்சனுடன் நெருக்கமாக பழகியது, கண்ணாடியில் முத்தம் கொடுத்தது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸ் இடத்திற்கே வந்து, என் மகளை வெளியே அனுப்பிவிடுங்கள். குடும்பமானமே போகிறது என்றெல்லாம் புலம்பி அழுந்திருந்தார்கள் என்றும் செய்திகள் வெளியானது. பின் பிக் பாஸ் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

ஐசுவின் வெளியேற்றத்திற்கு இதுவும் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஐசுவோ அவரது குடும்பத்தினரோ எந்த ஒரு பதிவையும் போடவில்லை. பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் பதிவு ஒன்றை போட்ட ஐசு ‘பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்ட் தூக்கி எதற்காக நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் உன்னை ஏமாற்றி இருக்கக் கூடாது. அதேபோல நிக்ஸனுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பிரதீப்பிடம் ஐசு குறித்து அவரது தந்தை பேசிய வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த உரையாடலில் ‘ நண்பா, எப்படி ஒவ்வொரு நாளையும் கடப்பது? மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த வாரம் ஐசு எலிமினேட் ஆனால் மிகவும் சந்தோசப்படுவேன். நீங்கள் உள்ளே செல்ல வாய்ப்பு இருந்தால் தயவு செய்து நிக்சனிடம் இருந்து அவளை காப்பற்றுங்கள். ஒரு சகோதரனாக என் குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ என்று மெசேஜ் செய்துள்ளார்.

இதற்கு பிரதீப் ‘ எனக்கு உங்களுக்கு எப்படி உதவி செய்வது என்பது தெரியவில்லை. அவளுக்காக என் பெயரை தவறாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். எனக்கு தெரிந்து இந்த வாரம் அவள் வெளியில் வந்துவிடுவாள் என்று நினைக்கிறேன். அது மட்டும் தான் நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதி. கவலைப்படாதீர்கள், எனக்கு தெரிந்து அவள் வலிமையான பெண் அவள் அதை சமாளித்துக்கொள்வார்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரதீப் ‘ ஆம், உங்கள் பெயரை அவள் தப்பாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். இதற்க்கு காரணம் மாயா மற்றும் பூர்ணமா தான். தயவு செய்து அவளை மன்னித்துவிடுங்கள். அவளுக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதே தெரியவில்லை. பூர்ணிமாவை தான் வெளியில் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் உள்ளே போனால் அவளுக்கு சொல்லி புரியவையுங்கள். வெளியில் இருக்கும் வெறுப்புகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் இந்த ஸ்க்ரீன் ஷாட்டை நீக்கி இருக்கிறார் பிரதீப்.

Advertisement