ஜோவிகாவிற்காக செய்யும் பப்லிசிட்டி ஸ்டண்ட்டா – வேதனையுடன் வனிதா கொடுத்த விளக்கம்.

0
343
- Advertisement -

பப்லிஸிட்டிக்காக தான் தாக்குதல் நாடகம் நடத்துவதாக எழுந்த விமர்சனத்திற்கு வனிதா காட்டமான விளக்கமளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 8 வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றம் தான் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் பிக் பாஸ் விமர்சனம் ஒன்றில் பேசிய வனிதா ‘விஜய் டிவி ஒரு போட்டியாளரை உள்ளே அனுப்பும் பொழுது எல்லாவிதமான பரிசோதனைகளை செய்துதான் அனுப்புகிறார்கள். அவர்களாலேயே பிரதீப் இடம் இருந்த பிரச்சினை கண்டுபிடிக்கவில்லை என்பது தான் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

-விளம்பரம்-

அவன் அவனுடைய அம்மாவையே ஒரு பொது நிகழ்ச்சியில் தவறாக பேசியிருக்கிறான். இதன் மூலமாகவே அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.பிரதீப் செய்தது ரொம்ப பெரிய கேவலம். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு தகுதியான ஆளே கிடையாது என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வனிதா மீது பிரதீப் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்து வந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தன் மீது பிரதீப் ஆதரவாளர் தாக்குதல் நடத்தியதாக வனிதா குற்றம் சாட்டி முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து பதிவிட்டு இருந்த அவர் ‘நேற்றிரவு பிக் பாஸ் 7 தமிழ் ரிவ்யூவை முடித்துவிட்டு, இரவு உணவுக்கு பிறகு என் தங்கை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது காருக்கு அருகில் சென்றேன். லைட் இல்லாமல் இருட்டாக இருந்த அந்த இடத்தில் திடீரென தோன்றிய மர்ம நபர் ஒருவர் “ரெட் கார்ட்” கொடுக்குறீங்களா? அதுக்கு நீ சப்போர்ட் வேற..“என்று கூறியபடி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார். பிரதீப் ஆதரவாளராக அவர் இருக்கலாம்.

இரவு 1 மணிக்கு  ரத்தம் வடிய வலியில் துடித்த என்னை, என் தங்கை மீட்டு முதலுதவி கொடுத்து, இது குறித்து போலீசிடம் புகாரளிக்குமாறு வலியுறுத்தினார், ஆனால் எனக்கு அதில் நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அந்த நபர் யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, என்னை தாக்கிவிட்டு பைத்தியக்காரன் போல் சிரித்த அவன் சத்தம், என் காதுகளில் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது’ என்றும் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பிரதீப், இருவருக்குமான வாட்ஸ் அப் உரையாடலைப் பதிவிட்டுள்ளார். அதில் பிரதீப், ‘ஜோவிகாவிற்கு எதிரானவன் நான் இல்லை’ என்று விளக்குகிறார். அதற்கு வனிதாவும், ‘உன்னை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உனக்கு ரெட் கார்டு கொடுத்தது வருத்தமளிக்கிறது’ என்று கூறுகிறார்.இந்த வாட்ஸ் அப் உரையாடலைப் பகிர்ந்த பிரதீப், “எனது போட்டியாளர்களுக்கு எதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ செய்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. நான் வனிதா விஜயக்குமார் அவர்களுடன் இப்படித்தான் பேசுகிறேன்.

உங்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் நான் உங்களுக்காக வருந்துகிறேன். கொஞ்சம் ஓய்வெடுங்கள்… ஜோவிகா புத்திசாலி, அவர் தானாகவே வெற்றிபெறுவார். அவருக்கு உங்கள் உதவி தேவையில்லை” என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பிக் பாஸில் இருக்கும் தனது மகளுக்கு மக்களின் ஆதரவை பெறவே வனிதா இப்படி நாடகம் ஆடுவதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வனிதா ‘ ஒரு சிலர் செய்யும் குற்றத்தை சிலர் பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று கூறுவது கேவலமாக இருக்கிறது. இதனால் தான் பலர் போலீசுக்கும் செல்வது கிடையாது. பாதிக்கப்பட்டவர்களை அசிங்கப்படுத்துவது மிகவும் கேவலமான ஒன்று. தற்போது நான் ஓய்வெடுத்து மீண்டு வருகிறேன். இதற்கும் ஜோவிகாவிற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. இரவு நேரத்தில் நான் தனியாக இருந்தது என்னுடைய தவறுதான். என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்வது என்னுடைய கடமையாகும். ஆனால், மோசமானவர்கள் வாழும் இந்த உலகத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே வெறுப்புகளையும் தவறான விஷயங்களையும் பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

Advertisement