விளையாட்டை எண்ணி அவமானம், பிரதீப்பிடம் மன்னிப்பு, பெற்றோர்களை எண்ணி வருத்தம் – ஐசு வெளியிட்ட உருக்கமான பதிவு.

0
82
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய ஐசு, பிக் பாஸுக்கு பின் முதல் பதிவை போட்டுள்ளார். ஐசு வெளியேறியது நிக்ஸனுக்கு தான் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இருவரும் நட்பாக பழகி வந்தார்கள். பின் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகுவதை பார்த்து பலருமே காதலிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை எழுதி இருந்தார்.

-விளம்பரம்-

பின் ஐசு வரும்போது நெக்சன் ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது.

- Advertisement -

பின் பிக் பாஸ் கோர்ட் டாஸ்க்கில் கூட ஐசு-நிக்சன் இருவரையும் வைத்து வழக்கு தொடர்ந்து வந்தார்கள். அதற்கு மணி, உன்னை பற்றி எல்லாம் ஐசு சொன்னதை இங்கு நான் சொன்னால் நீ என்ன ஆகுவாய் என்று தெரியாது? என்றெல்லாம் பேசி இருந்தார். மேலும், நேற்று நிகழ்ச்சியில் இருந்து ஐசு வெளியேறியது நிக்சனுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது.யார்கிட்டேயும் தலையீடவே கூடாது. பேசுனா கூட வெளியே லவ் பண்ணுவாங்கன்னு நினைச்சிக்கிடுவாங்கன்னு பயமா இருக்கு. ஒரு பையனும், பொண்ணும் பேசுனா லவ்வா, அது லவ்வா மட்டும் தான் இருக்குமா.

அவங்க வீட்டில் புரிஞ்சிக்கணும். பிக் பாஸ்ஸில் சொன்னதெல்லாம் சும்மா ஜோக் தான். ஐஷூவுக்கு இருக்க திறமைக்கு அவள் பெரிய நிலைமைக்கு போவாள் என்று புலம்பி இருந்தார். ஏற்கனவே நிகழ்ச்சியில் ஐஸு, நிக்சனுடன் நெருக்கமாக பழகியது, கண்ணாடியில் முத்தம் கொடுத்தது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸ் இடத்திற்கே வந்து, என் மகளை வெளியே அனுப்பிவிடுங்கள்.

-விளம்பரம்-

குடும்பமானமே போகிறது என்றெல்லாம் புலம்பி அழுந்திருந்தார்கள் என்றும் செய்திகள் வெளியானது. பின் பிக் பாஸ் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். தற்போது ஐசுவின் வெளியேற்றத்திற்கு இதுவும் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஐசுவோ அவரது குடும்பத்தினரோ எந்த ஒரு பதிவையும் போடவில்லை. மேலும், ஐசுவும் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்க்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஐசு.

அதில் ‘ இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் இந்த வாய்ப்பு கிடைக்காத என்று எத்தனையோ ஆயிரம் பெண்கள் ஏங்கிக் கொண்டிருக்கிற எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தாமல் என்னுடைய குடும்பத்திற்கு அவ மரியாதையை ஏற்படுத்தி விட்டேன் என் மீது இருந்த மரியாதை நான் எழுந்து விட்டேன்.அர்ச்சனா மணி அண்ணா, யுகேந்திரன் என்று பலர் நான் தவறான விஷயத்தை செய்கிறேன் என்று சொல்லியும் அதை நான் கேட்கவில்லை. கோபம், காதல், பொறாமை, நட்பு ,ஆகியவை என் கண்ணை மறைத்து விட்டது.

இந்த விஷயத்தில் என் குடும்பத்தை தயவுசெய்து விட்டு விடுங்கள். இது அனைத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பு. இந்த நிகழ்ச்சி என்னை என் வாழ்க்கையின் விளிம்பிற்கே தள்ளி விட்டது. ஆனால், என் குடும்பத்தால்தான் நான் தற்போது சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்ட் தூக்கி எதற்காக நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் உன்னை ஏமாற்றி இருக்கக் கூடாது. அதேபோல நிக்ஸனுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய வெளியேற்றத்திற்கு பின்னர் அவர் நிச்சயம் நன்றாக விளையாடுவார். நான் என்னுடைய செயல்களை நியாயப்படுத்த விரும்புவதில்லை. நான் தவறு செய்து விட்டேன் 21 வயது பெண்ணிற்கு என்ன முயற்சி இருக்குமோ அதுதான் எனக்கும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் பலர் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதை கற்றுக் கொள்வார்கள். ஆனால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு வாழும் உதாரணம் நான் தான். என்னை மன்னித்து விடுங்கள் அசிங்கத்துடன் ஐஷு.

Advertisement